திட்டவட்டமாக விஜய் சொன்ன முடிவு...உச்சகட்ட நெருக்கடியில் காங்கிரஸ்

Jan 06, 2026,02:07 PM IST
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? இது தான் கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என மீடியாக்களால் அதிகம் விவாதிக்கப்படும் கட்சியாக இருப்பது காங்கிரசும், விஜய்யின் தவெக.,வும் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலேயே,தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என ஓப்பனாக அறிவித்து விட்டார் விஜய். இருந்தாலும் தற்போது வரை தவெக.,வுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி வைக்க முன் வரவில்லை. இருந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ், தவெக கூட்டணியில் இணைய போவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் மீடியாக்களில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.



இந்த பக்கம் திமுக.,வுடன் கூட்டணி பேசி இறுதி செய்தி விட்டு, தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ், மற்றொரு புறம் தவெக.,வுடனும் கூட்டணி பேசி வருவதாக சொல்லப்பட்டது. தவெக.,வுடன் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்ட உண்மை தான் என தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விஜய் சொன்ன முடிவால் அதிர்ந்து போன காங்கிரஸ், அதை மறைப்பதற்காக தாங்கள் திமுக உடன் மட்டுமே பேசி வருவதாகவும், தவெக உடன் கூட்டணி பேசவே இல்லை என்றும் சொல்லுகிறது. இரண்டு மாதங்களாக தவெக உடன் கூட்டணி என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அதற்கு பதிலளித்து, இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய், காங்கிரசிடம் அப்படி என்ன தான் சொன்னார் என விசாரித்த போது, தவெக.,வும் காங்கிரசின் கூட்டணியை எதிர்பார்க்கிறதாம். ஒருவேளை காங்கிரஸ் வர மறுத்தால், என்டிஏ கூட்டணியில் இணைய இருப்பதாக கூறி விட்டாராம். தற்போது திமுக கூட்டணியை உடைத்துக் கொண்டு, தவெக பக்கம் செல்லலாம் என்றால், லோக்சபாவில் இன்னும் 3 ஆண்டுகள் பாஜக.,விற்கு எதிராக அரசியல் செய்ய திமுக.,வின் ஆதரவு காங்கிரசிற்கு தேவை. சரி திமுக கூட்டணியிலேயே இருக்கலாம் என்றால், காங்கிரஸ் கேட்பதோ 38 சீட் மற்றும் 3 அமைச்சர் பதவி. ஆனால் திமுக.,வோ ஏற்கனவே கொடுத்த 25 சீட், இல்லை என்றால் அதிகபட்சம் 28 தான் தர முடியும் என பிடிவாதமாக உள்ளதாம்.

திமுக.,விடம் ஏன் சீட் கேட்டு கெஞ்ச வேண்டும், தவெக பக்கம் சென்றால் 70 சீட் கூட கிடைக்கும் என நினைத்து தவெக பக்கம் செல்லலாம் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால் ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை போன்றவர்கள், குறைவான சீட் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டும். அப்படி திமுக கூட்டணியை முறித்துக் கொண்டால் காங்கிரஸ் இரண்டாக உடையும். நாங்கள் தனியாக, தேசிய ஜனநாயக பேரவை என்ற கட்சியை துவக்கி, திமுக.,வுடன் இணைந்து போட்டியிடுவோம் என போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கிறார்களாம். கட்சி இப்போது இருக்கும் நிலையில் இரண்டாக உடைந்தால் என்ன ஆவது ? இதனால் இருதலை கொல்லி எறும்பாக எந்த பக்கம் செல்வது என தெரியாமல் மாட்டிக் கொண்டு உச்சகட்ட நெருக்கடியில் இருக்கிறதாம் காங்கிரஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்