கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்...பிரச்சாரத்தில் சலசலப்பு

Mar 30, 2026,05:31 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பெயரை விஜய் மாற்றி உச்சரித்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


என்ன நடந்தது? :


சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.எஸ். பாபு என்பவரை ஆதரித்து விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றிய விஜய், தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க முயன்றார்.  அப்போது, கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ். பாபுவின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக மாதவரம் தொகுதி வேட்பாளர் பிரபு என்பவரின் பெயரை உச்சரித்தார்.


தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு :


திடீரென தொகுதி வேட்பாளர் பெயர் மாறியதைக் கேட்ட அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு நிமிடம் சிறு குழப்பம் ஏற்பட்டது. உடனடியாகத் தனது தவறை உணர்ந்து கொண்ட விஜய், அதனைச் சரிசெய்து கொண்டு வி.எஸ். பாபுவுக்காகத் தொடர்ந்து வாக்கு சேகரித்தார். அரசியல் களத்திற்குப் புதியவரான விஜய், மிகக் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவதால், பணிச்சுமை மற்றும் களைப்பு காரணமாக இத்தகைய சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் :




திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்தது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை தான் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்துள்ளார். இந்த சமயத்தில் இங்கு பிரச்சாரம் செய்த விஜய், விரைவில் விடைபெற போகும் திமுக அரசு என குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார்.


சமூக வலைதளங்களில் வைரல் :


இந்தத் தகவல் மற்றும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் வைரலாகத் தொடங்கின. ஒரு தரப்பினர் இது மனித இயல்புதான் என்று அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் இதனை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், விஜய்யின் வருகைக்காகக் கூடியிருந்த பெரும் கூட்டமும், மக்களின் வரவேற்பும் தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்