தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் விஜய் போட்டியிட போகும் அந்த 2 தொகுதிகள்

Feb 09, 2026,05:39 PM IST

சென்னை: பல்வேறு விருப்பங்களை பரிசீலித்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த இரண்டு தொகுதிகளும் தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இதற்காக பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருக்கையில் தவெக தலைவர் விஜய் யாருனும் கூட்டணி கிடையாது என அறிவித்து விட்டு, 234 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் இறங்கி உள்ளார். இதற்கிடையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதே போல் விஜய் "வி" என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் தான் போட்டியிட போகிறார் என்ற தகவல்களும் பரவி வந்தன.




இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னையின் விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கான திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், தனது முதல் தேர்தல் களத்தில் இறங்கும் கட்சியின் ஒரே அடையாளமாக விளங்கும் விஜய்யின் வெற்றியை உறுதி செய்ய கட்சி முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


நகர்ப்புற செல்வாக்கை நிலைநாட்ட விருகம்பாக்கத்தையும், மத்திய தமிழ்நாட்டில் கட்சியின் பிடியை வலுப்படுத்த திருச்சி கிழக்கையும் தேர்வு செய்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், தவெக வெறும் சென்னை சார்ந்த கட்சி மட்டுமல்ல, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் செல்வாக்குடையது என்ற செய்தியை சொல்ல விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வேளச்சேரி, விக்கிரவாண்டி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.


விருகம்பாக்கம் தொகுதியில் தற்போது திமுகவின் ஏ.எம்.வி. பிரபாகர ராஜாவும், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜும் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார யுக்திகளை தவெக விரைவில் அறிவிக்க உள்ளது. விஜய்யின் முதல் தேர்தல் களம் என்பதால், வெற்றியை உறுதி செய்ய இரண்டு இடங்களில் போட்டியிடுவது பாதுகாப்பான முடிவாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்