Vijay.. என் மகன் விஜய் கண்டிப்பாக ஜெயிப்பார்.. தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

Dec 10, 2024,02:07 PM IST

சென்னை: தவெக தலைவர், என் மகன் விஜய் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்து வரும் விஜய், கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி வி சாலையில், பிரமாண்ட மாநாட்டை நடித்தினார். இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நடிகராக இருந்த விஜய் கட்சி தலைவராக காரசாரமாக விக்கிரவாண்டி மாநாட்டில் பேசினார். அவர் பேசிய பேச்சு குறித்து இன்று வரை பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் விவதித்து வருகின்றனர்.




இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னையில் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு சார்பில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டார் பேசினார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.


நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய். இது தற்போது  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, விஜய் குறித்த பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் விஜய் கண்டிப்பாக ஜெயிப்பார். அவரின் அரசியல் நகர்வு நல்லா இருக்கிறது என்று தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்