சென்னை: பக்ரீத் நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு எப்போது நடைபெறும் என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கேட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்ட தூதர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில், அதிகாலையில் மசூதிகள், பொது மைதானங்களில் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகைகள் செய்தி இறைவனை வழிபாடு செய்வார்கள்.

தமிழகத்தில் பக்ரித் திருவிழாவை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது இணைய பக்கத்தில்,
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பதிலுக்கு மாநாடு எப்போது தலைவா என்று ரசிகர்கள் அவரது எக்ஸ் தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர். வெறும் வாழ்த்து மட்டும் போதாது தலைவா.. சீக்கிரமே மாநாடு வைங்க என்றும் அவர்கள் அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}