விஜய் கட்சி தொடங்க யார் காரணம் தெரியுமா?.. முன்னாள் எம்.ஏல்.ஏ.விஜயதாரணி வெளியிட்ட இன்ஃபோ!

Aug 27, 2024,06:50 PM IST

டெல்லி: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் தற்போது முக்கிய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ன கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் படிப்படியாக கட்சி பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தவெக கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இந்த கட்சிக் கொடி மற்றும் பாடலுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்த போதிலும், விஜய் ரசிகர்கள், விஜய் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் கட்சியின் மாநாடும் விரைவில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்று விஜயதாரணி பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர் திடீரென பாஜக பக்கம் தாவினார். ஆனால் அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் அவர் உள்ளார். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் புதுத் தகவல்களை வெளியிட்டுள்ளார் விஜயதாரணி.


இது குறித்து விஜயதாரணி பேசுகையில், நான் காங்கிரசில் இருக்கம் போது, டெல்லியில் ஒரு நாள் நடிகர் விஜய்யை காங்கிரசில் சேர்ப்பதற்காக சில தலைவர்கள் அழைத்து  வந்தார்கள். அப்போது, ராகுல் காந்தி, உங்களுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. காங்கிரஸில் எதற்கு தனி போஸ்ட் கேட்கறீர்கள். நீங்கள் தனி கட்சி தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். அந்த அடிப்படையில் விஜய் இப்போது கட்சி தொடங்கி இருக்கலாம். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு டெக்டானிக் மூவ்மெண்ட் தமிழகத்தில் நடக்கும்.




நான் பாஜகவில் சேரும் போது எம்பி சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் கன்னியாகுமரியில் மூத்த தலைவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் மூத்த தலைவர் மட்டுமல்ல, என் அண்ணாச்சியும் கூட. அதனால் நானே அவரோடு இணைந்து தேர்தல் களப்பணி ஆற்றினேன். ஆனால் அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றார். அவருடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய எனக்கு இது வருத்தம் தான். கன்னியாகுமரியில் பாஜக வலுவான கட்சி என்ற நிலையில் இப்படி தோல்வி பெற்றது கூடுதல் வருத்தம். வரும் தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் விஜய தாரணி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்