சென்னை: மறைந்த தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சோபம் லட்சம் தொண்டர்கள் கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்த்துக்கு பிரியா விடை அளித்தனர்.
முன்னதாக இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் தீவுத்திடலிலிருந்து கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபடி வந்தனர். மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால் வாகனம் நகருவதில் மிக மித தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்ட 4.45 மணிக்கு மேல்தான் வாகனம் கோயம்பேடு அதிமுக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது.
உடல் வந்து சேர்ந்ததும் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் தொடங்கின. பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இறுதியாக சந்தனப்பேழை மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
200 பேருக்கு மட்டுமே அனுமதி
மக்கள் அலைகடல் என திரண்டு வந்திருக்கும் காரணத்தினால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நேர்மை, எளிமை, தைரியம், கடுமையான உழைப்பாளி என என்னற்ற பண்புகளை கொண்டிருந்த விஜயகாந்த் மறைந்து விட்டார். இதை இன்னும் கூட ரசிகர்களால் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்குள்ளும் ஊடுறுவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
2006ல் தேமுதிகவை தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வந்தார் கேப்டன் விஜயகாந்த். தன்னை பார்க்க வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்கி மகிழ்ந்த கொடை வள்ளல். படப்பிடிப்பில் தனக்கு வழங்கப்படும் உயர் தர உணவுகள் அனைத்துமே கடைநிலை தொழிலாளிக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் கேப்டன். அதற்கு செலவாகும் கூடுதல் தொகையை தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் கூறுவாராம்.
சாதி மதம் பார்க்கமாட்டார் என்பதற்கு அவர் வீட்டு பூஜை அறையே உதாரணம். கேப்டன் விஜயகாந்த் விட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா, இயேசு-மாதா, திருப்பதி ஏழுமலையான், முருகர், விநாயகர் படங்கள் வைக்கப்பட்டிருக்கும். மனசு சரி இல்லை என்றால் கண்ணூர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்வது கேப்டன் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி பல வகையிலும் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த விஜயகாந்துக்கு தமிழ் கூறும் நல்லுலகம் பிரியா விடை கொடுத்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}