சென்னை: விஜய் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார். அவரது உயரம் அவ்வளவுதான் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பயணத்தை இன்று அமைச்சர் சேகர்பாபு கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஸ்ரீரங்கம் கோவிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ளவேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சரின்அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதலமைச்சரையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்தின் பயத்திற்கான முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே தி.மு.க. கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜா வேஷம் கலைஞ்சுபோச்சு. சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2026 தேர்தல் களத்தில் சந்திப்போம். விஜய் 2 மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், ராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனதுகருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!
அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
குருதிப்பூக்கள் (சிறுகதை)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
{{comments.comment}}