மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி நடக்கக் கூட முடியாமல் தடுமாறியபடி நடந்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சச்சினும், காம்ப்ளியும் பள்ளிக்காலம் முதல் நண்பர்கள். இருவரும் இணைந்து பள்ளிக்கூட அளவில் கிரிக்கெட் ஆடி ரன்கள் குவித்தது உலக சாதனையும் ஆனது. அதன் பின்னர் சச்சினும், காம்ப்ளியும் அடுத்தடுத்து இந்திய அணியிலும் இடம் பெற்றார்கள். சச்சின் ஒரு ஸ்டைலில் விளையாடினார். காம்ப்ளி ஒரு ஸ்டைலில் ஆடினார். இதில் சச்சின் நீண்ட காலம் இந்திய அணியில் நிலைத்து நின்று விளையாடினார். ஆனால் காம்ப்ளி சீக்கிரமே தனது கெரியரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்.

காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது அவரது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியது. ஆனால் அதற்கு அவர்தான் காரணம். அவரது முன்கோபம், கோபம், முரட்டுத்தனம், மனைவியுடன் சண்டை, போதைப் பழக்கம் எல்லாம் சேர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையை நரகமாக்கி விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த காம்ப்ளி நடக்கக் கூட முடியாமல் தடுமாறும் வீடியோ காட்சி வெளியாகி அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் போதையில் வந்ததாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவருக்கு சில காலமாகவே உடல் நலம் சரியில்லை. இதனால்தான் அவர் நடக்க முடியாமல் தடுமாறியுள்ளார் என்று பலர் கூறுகிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை.
சாலையோரம் ஒரு பைக்கில் சாய்ந்தபடி நின்று கொண்டிருக்கிறார் காம்ப்ளி. எந்த வாகனத்தில் வந்தார், அந்த இடத்திற்கு ஏன் வந்தார் என்று தெரியவில்லை. அருகில் இருந்தவர்களிடம் அவர் உதவி கேட்கிறார். அக்கம் பக்கத்தினர் வந்து உதவி செய்கின்றனர். காம்ப்ளியால் காலைத் தூக்கி வைக்க முடியவில்லை. அவரை கிட்டத்தட்ட தூக்கிச் செல்வது போல மக்கள் அழைத்துச் செல்வதாக அந்த வீடியோவில் உள்ளது. இந்தக் காட்சி காம்ப்ளி ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்படி இருந்த மனிதர்.. இவ்வளவு மோசமான நிலைக்குப் போய் விட்டாரே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்காக 100க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகள் 17 டெஸ்ட் போட்டிகளில் காம்ப்ளி விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். முதல் தர போட்டியில் இவர் ஒரு இன்னிங்ஸில் 262 ரன்களையும் குவித்தவர். காம்ப்ளியின் தற்போதைய நிலை அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}