ரிடையர் ஆன பிறகு பாருங்க.. கிரிக்கெட் பக்கமே வர மாட்டேன்.. இப்படி சொல்லிட்டாரே விராட் கோலி!

May 16, 2024,05:38 PM IST

பெங்களூரு: கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்ற பின் என்னை யாராலும் பார்க்க முடியாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.


நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர் விராட் கோலி. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்தலாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றவர் விராட் கோலி. இவருக்கு தற்போது  35 வயது ஆகின்றது. இதனால் அவ்வப்போது அவரது ஓய்வு குறித்த பேச்சு பேசப்பட்டு வருகிறது. மேலும், டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி 20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற கருத்து் உள்ளது.




இந்நிலையில், அவரே தனது ஓய்வு குறித்து பேசி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கின்றேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை.


ஒவ்வொரு நாளும் கடந்த கால கிரிக்கெட் குறித்து சிந்திக்கவும் விரும்பவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின் நாட்களில் வருத்தம் அடையக் கூடாது. ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால்,கிரிக்கெட் களம் விட்டு வெளியேறினால், யாரும் என்னை பார்க்கவே முடியாது. அதனால் களத்தில் இருக்கும் வரை 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்