டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் 21 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இத்தனை காலம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
இந்திய அணியில் முன்னணி வீரராக இருந்தவர் ஷேவாக். சச்சின் விளையாடிய காலத்தில் அவருடனும் பின்னர் கம்பீருடனும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் அசத்தலான கிரிக்கெட்டை ஆடி வந்தவர். அதிரடி பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இவரது பேட்டிங் ஸ்டைலும் சரி, அவரது துணிச்சலான பேட்டிங்கும் சரி ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாதவை. இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஷேவாக்.

அப்படிப்பட்ட ஷேவாக் இப்போது தனது திருமண வாழ்க்கையில் முக்கிய கட்டத்துக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஷேவாக்குக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆர்யாவீர், வேதாந்த் என்று இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக ஷேவாக் மற்றும் ஆர்த்தி இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்று கூறப்படுகிறது. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வந்தன.
இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாகவும், விரைவில் விவாகரத்து கோரி மனு செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் இருவரும் தத்தமது சமூக வலைதளங்களில் பரஸ்பரம் அன்பாலோ செய்து கொண்டுள்ளனர். இதனால் விரைவில் அவர்கள் அதிகாரப்பூர்வமாக பிரியக் கூடும் என்ற பேச்சுக்கள் வலுத்துள்ளன.
ஷேவாக்கின் மகன் ஆர்யா வீர், தனது தந்தையைப் போலவே அதிரடி கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார். டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த கூச்பிஹார் டிராபி போட்டியில் மேகாலாயவுக்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியாக பேட்டிங் செய்து 309 பந்துகளில் 297 ரன்களை விளாசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தான் இதற்கு முன்பு உள்ளூர் போட்டியில் எடுத்த 319 ரன்கள் என்ற ஸ்கோரை தாண்டி எடுத்தால் பெராரி கார் பரிசளிப்பதாக தனது மகனுக்கு உறுதியளித்துள்ளார் ஷேவாக். இதைக் குறிப்பிட்டு, ஆர்யா வீர்சிறப்பாக விளையாடினாய்.. ஆனால் 23 ரன்களில் பெராரி காரைத் தவற விட்டு விட்டாய்.. பரவாயில்லை. தொடர்ந்து இதேபோல சிறப்பாக ஆடி நிறைய டபுள் செஞ்சுரி, டிரிபிள் செஞ்சுரி அடிப்பாய் என்று ஷேவாக் டிவீட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாகவே விஐபிக்களின் விவாகரத்து லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போகிறது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துதான் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஷேவாக்கின் பெயர் அடிபடுவதால் அவரது ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.
சிறந்த தம்பதிகளாக வலம் வருவோரும் கூட.. கடைசியில் விவாகரத்தில் வந்து நிற்பது ஏன்.. என்ன காரணம்.. உங்களது கருத்து என்ன?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
{{comments.comment}}