சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நடிகர் விஷால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வர முடியாதது துரதிஷ்டவசமானது. விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.

வாழும் போது பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்த் பெயர் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார். நடிகர் ஆர்யாவும் உடனிருந்தார்.
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
{{comments.comment}}