VJ சித்ராவின் தந்தையின் அதிர்ச்சி முடிவு.. மகளின் துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கினார்!

Dec 31, 2024,08:42 PM IST

சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை தனது மகளின் நினைவுகளை மறக்க முடியாமல் அவரது துப்பட்டாவிலேயே தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.


சின்னத்திரையில் தொகுப்பாளினியாக, நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. சின்னத்திரை சித்ரா, விஜே சித்ரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தபோது மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றார். பட்டி தொட்டியெங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது.




இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஹேம்நாத் என்பவரை மணந்து கொண்டார் சித்ரா. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் சித்ரா. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். 


4 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். அதில், சித்ராவின் கணவர்தான் அவரது மரணத்திற்குக் காரண் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ரேவதி. இந்த தீர்ப்பு வந்தது முதலே சித்ராவின் தந்தை காமராஜ் (64 வயது) மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.  டிசம்பர் 9ம் தேதிதான் சித்ராவின் நினைவு நாளாகும். அன்றும் பெரும் சோகத்துடன் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் மகள் சித்ராவின் துப்பட்டாவை எடுத்து தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார் காமராஜ்.


சித்ராவின் நினைவால் அவரது தந்தை எடுத்த இந்த முடிவு அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையம், அக்கம் பக்கத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலை உணர்வு ஏற்பட்டால் உடனடியாக உரிய மன நல ஆலோசனை பெறத் தயங்காதீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு காண முயலுங்கள். அப்படி முடியாவிட்டால் உரிய கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுங்கள். தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக கீழ்க்கண்ட உதவி எண்களை அழைத்து உரிய ஆலோசனைகளைப் பெறுங்கள்.


Tamil Nadu State health department's suicide helpline: 104

Sneha Suicide Prevention Centre - 044-24640050



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்