சென்னை: வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், திராவிட ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இந்த குழந்தைகளின் சிரிப்புதான், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நாங்கள் செலுத்துகிற மரியாதை. இதன்மூலம், மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறேன்!
திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம், ஆனால் அதற்காக பாடுபடுவது எளிதானது அல்ல, சாமானிய மக்களின் எழுச்சி தான் திராவிட இயக்கம். மக்களின் குரலாக திமுக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் என்றால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பதவி மோகத்தில் இருந்தோம் என சிலர் நினைக்கின்றனர். எங்கள் அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இங்கு இடமில்லை. இந்த உழைப்பை தான் பெரியார், அண்ணா, கலைஞர் கற்றுத்தந்தனர்.
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கு. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவற்காக கிடைத்த வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும்.
கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் 3 ஆண்டு தந்தோம். குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோமே, இதெல்லாம் வாக்கு அரசியலுக்காகவா? 6,288 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கபோகிறோம். இது என்ன வாக்கு அரசியலுக்காக செய்வதா? இன்மேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை கவனித்துக்கொள்ள அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}