சேலம்: மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 90,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனை அடுத்து திறந்த விடப்படும் நீரின் அளவும் அதிகரித்து மேட்டூர் அணைக்கு நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

பின்னர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவு அப்படியே 16 மதகு கண் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறுகளில் அதிக நீர் வரத்து உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 90,000 கன அடி ஆக குறைந்தது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர், அப்படியே திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாகவே உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சி ஆக உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}