Chennai Lakes: சென்னை ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு.. கூடுதல் மழை வந்தால் சூப்பரா இருக்கும்!

Nov 18, 2024,11:20 AM IST

சென்னை: காற்று சுழற்சியால் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு அணைகளில் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் பருவ மழை தீவிரமடையும்போது, ஏரிகளுக்கு  நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. அதே சமயத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  எதிரொலியால் அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 




தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 90 அணைகள் உள்ளன. இதில் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம் ,தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையிலும் புறநகர்களிலும் சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு நீர்த்தேக்கங்களின்  நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 


கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.  இன்று காலை 8 மணி நிலவரம் படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 106.98 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் 74.183 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு  மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ள நிலையில்,  பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம், ஆகிய ஏரிகளில் மொத்தம் 6.28 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. 6 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 13.21 டிஎம்சி ஆகும்.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து  எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது.. எவ்வளவு நீர் வந்து கொண்டிருக்கிறது.. என்பது குறித்த விபரங்கள் பின்வருமாறு,


பூண்டி நீர்த்தேக்கம்:



மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.36 அடி (498 மில்லியன் கன அடி)


தற்போது 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 377 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 16.98அடி (2403 மில்லியன் கன அடி)


149 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 219 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 2.38 அடி (115 மில்லியன் கன அடி)


சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. ஆனால் ஒரு கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 17.30 (1983 மில்லியன் கன அடி)


மொத்தம் 450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 133 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 30.44 அடி ( 307 மில்லியன் கன அடி)


தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்துக்கு வரும் 15 கன அடி தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


வீராணம்:


மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 6.50 அடி ( 969 மில்லியன் கன அடி)


ஏரிக்கு தற்போது வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 120 கன அடி தண்ணீர் திறந்து முழுவதும் அப்படியே விடப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்