தமிழ்நாட்டில் உள்ள.. 90 அணைகளிலும்.. நீர் இருப்பு.. 10 நாட்களில் அதிகரிப்பு.. நவம்பரில் நிரம்பலாம்!

Nov 04, 2024,05:12 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் நீர் இருப்பு கடந்த 10 நாட்களில் 14 சதவீதம் அதிகரித்து, 72.85 சதவீதமாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 90 அணைகளின் நீர் இருப்பு 73.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில்  பருவமழை தீவிரமடைந்து அணைகள் பல நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 


இதுவரை 1,810 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்களில் தொடர் மழை பெய்வதால் அவை வேகமாக நிரம்பி வருகின்றன.




90 அணைகளின் நீர் இருப்பு: 


நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியார், வைகை அணை, பரம்பிக்குளம் என மொத்தம் 90 அணைகள் உள்ளன . இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கன அடி ஆகும். இதை டிஎம்சி கணக்கில் சொன்னால், 224.297 டிம்சி ஆகும். இவற்றில் 1,65,260 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 10 நாட்களில் 90 அணைகளின் நீர் இருப்பு 72.85 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது நீர் இருப்பு 73.68 சதவீதம் உயர்ந்து உள்ளதாக   நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விவரம் பின்வருமாறு:


பூண்டி நீர்த்தேக்கம்:


மொத்த கொள்ளளவு - 35 அடி (3231 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 22.42 அடி (505 மில்லியன் கன அடி)


செங்குன்றம்


மொத்த கொள்ளளவு - 21.20 அடி (3300 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 17.07அடி (2420 மில்லியன் கன அடி)


சோழவரம் 


மொத்த கொள்ளளவு - 18.86 அடி (1081 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 1.19 அடி (84 மில்லியன் கன அடி)


செம்பரம்பாக்கம்


மொத்த கொள்ளளவு - 24 அடி (3645 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 15.51(1626 மில்லியன் கன அடி)


கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை: 


மொத்த கொள்ளளவு - 36.61 அடி (500 மில்லியன் கன அடி)

நீர் இருப்பு - 30.54 அடி ( 310 மில்லியன் கன அடி)


வீராணம்:


மொத்த கொள்ளளவு-15.60 அடி(1465 மில்லியன் கன அடி) 

நீர் இருப்பு - 13.90 அடி ( 1051மில்லியன் கன அடி)


மேட்டூர் அணை நீர் மட்டம்: 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,917 கனடியில் இருந்து 11,526 கனடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று குறைந்து 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு 107.24 அடியாக உள்ளது. அதாவது  74.543 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் மூலமாக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்