வயநாடு: கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு கண்காணித்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு நபர் ஒரு தொகுதியில் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர். அதேபோல் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரியும் களம் காண்கின்றனர். அங்கு மும்முனைப் போட்டி நிலவி வருவதால் பிரச்சார பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. முக்கிய மூன்று கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 14,71,732 வேட்பாளர்கள் உள்ளனர்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
பிரியங்கா காந்தி, கல்பட்டா நகரத்தில் உள்ள ஜென் ஜோசப் பள்ளி வாக்குச்சாவடியில் திடீரென என்ட்ரி கொடுத்து பார்வையிட்டார். ஏராளமான மக்கள் பிரியங்கா காந்தியை உற்சாகமுடன் வரவேற்றனர். நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இத்தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}