வயநாடு: கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். மேலும் தனது அண்ணன் ராகுல் காந்தி கடந்த முறை பெற்ற வாக்கு வித்தியாசத்தையும் தாண்டி சாதனை படைத்து விட்டார் பிரியங்கா காந்தி.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 57 ஆயிரத்து 571 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பிரியங்கா காந்திக்கு இதுவரை 6 லட்சத்து 22 ஆயிரத்து 338 வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சிபிஐ வேட்பாளர் சத்யன் மோக்கேரிக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 407 வாக்குகள் கிடைத்துள்ளன. 3வது இடத்தில் இருக்கும் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1 லட்சத்து 9 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணிலை வகித்து வருகிறார் பிரியங்கா காந்தி.

இதன் மூலம் ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த லோக்சபா பொதுத் தேர்தலின்போது இதே தொகுதியில் போட்டியிட்ட தனது அண்ணன் ராகுல் காந்தி பெற்ற வாக்கு வித்தியாசத்தை அவர் முறியடித்துள்ளார். பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மொத்தமாக அவர் 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகளையும் பெற்றிருந்தார். அதேசமயம், 2019 லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ராகுல் காந்தி பதிவு செய்திருந்தார். அத்தேர்தலில் அவருக்கு மொத்தம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 367 வாக்குகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசமும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஆக இருந்தது. இந்த சாதனையை பிரியங்கா முறியடிப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கிடையே தனக்கு வாக்களித்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி. தன்னை தேர்ந்தெடுத்தது குறித்துப் பெருமைப்படும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}