Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

Nov 23, 2024,05:38 PM IST

சென்னை: நேரு - காந்தி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு எம்பி நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளார். இது நேரு காந்தி குடும்பத்தின் 4வது தலைமுறையிலிருந்து வரும் இன்னும் ஒரு எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அரசியல் குடும்பங்களில் முக்கியமானது ஜஹர்லால் நேரு - இந்திரா காந்தி குடும்பம். நாட்டின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி பின்னர் பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்துள்ளார்.  இதில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தீவிரவாதத்திற்குப் பலியானவர்கள்.  இப்படி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜவஹர்லால் நேரு குடும்பத்திலிருந்து இப்போது பிரியங்கா காந்தி புதிய எம்.பியாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார். இதன் மூலம் புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது.  நான்காவது தலைமுறையிலிருந்து 2வது எம்.பியாக நாடாளுமன்றம் செல்லவுள்ளார் பிரியங்கா காந்தி.



முதல் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு எம்.பியாக இருந்துள்ளார். 2வது தலைமுறையில் அவரது மகள் இந்திரா காந்தி எம்.பி. ஆனார். 3வது தலைமுறையில் ராஜீவ் காந்தியும், பிறகு அவரது மனைவி சோனியா காந்தியும், அதேபோல ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும் எம்.பியாக இருந்துள்ளனர். 4வது தலைமுறையில் எம்.பியாக ராகுல் காந்தியும், மேனகா காந்தி மகன் வருண் காந்தியும் எம்.பியாக இருந்துள்ளனர். இப்போது இந்த வரிசையில் 4வது தலைமுறையிலிருந்து புதிதாக பிரியங்கா காந்தி எம்.பியாகிறார்.

இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரானார். சோனியா காந்தி ராஜீவ் காந்தியின் மனைவி ஆவார். ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்  மனைவி சோனியா காந்தி இந்திய தேசிய காங்கிரஸில்  1998 ஆம் ஆண்டு முதல் 2017 வரை தலைவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தி 2017 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். அதே சமயத்தில் சகோதரி பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

தெற்கிலிருந்து 3வது எம்.பி



நேரு காந்தி குடும்பத்திலிருந்து தென் மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3வது நபர் பிரியங்கா காந்தி ஆவார். இதற்கு முன்பு அவரது தாயார் சோனியா காந்தி, கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி ஆகியிருந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி கேரளாவிலிருந்து எம்.பி. ஆனார். தற்போது இவர்களுடன் பிரியங்காவும் இணைந்துள்ளார்.

தற்போது லோக்சபாவில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக அதிரடி காட்டி வருகிறார். அவருடன் பிரியங்கா காந்தியும் இனி இணையவுள்ளதால் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இருவரும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்