சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கினாலும் கூட,
கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதே சமயத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதன்படி, வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் தற்போது கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதே சமயத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!
உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!
கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது
{{comments.comment}}