சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த, ஃபெஞ்சல் புயல், புதுச்சேரியை உண்டு இல்லை என்று செய்து விட்டு தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்து விட்டது. இருப்பினும் தொடர்ந்து புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் இன்று ஒரு நாள் மட்டும் 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 2 - தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது
டிசம்பர் 3- திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}