வீக்என்ட் மட்டும்தான் எக்சர்சைஸ் பண்ற ஆளா நீங்க?.. அட உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் பாஸ்!

Oct 03, 2024,06:10 PM IST

சென்னை:   சிலருக்கு வார இறுதி நாட்களில்தான் நிறைய டைம் கிடைக்கும், ஓய்வு கிடைக்கும். எனவே அந்த சமயத்தில்தான் பல முக்கிய வேலைகளையெல்லாம் பிளான் பண்ணுவாங்க. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே வாக்கிங், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளையும், ஒர்க்கவுட்டையும் சிலர் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்திருக்கு.


அதாவது வாரம் முழுக்க உடற் பயிற்சி செய்பவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறதோ, அதேதான் இப்படி வார இறுதி நாட்களில் மட்டும் செய்பவர்களுக்கும் கூட கிடைக்கிறதாம். இதை ஒரு ஆய்வில் கண்டறிந்து கூறியுள்ளனர்.


150 நிமிட உடற்பயிற்சி போதுமானது




மேலும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் வரை நல்ல முறையில் தேவையான அளவுக்கு உடற்பயிற்சிகளைச் செய்தால் கூட போதுமாம்.. கிட்டத்தட்ட 200 வகையான நோய்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கிறதாம்.. கேட்கவே சூப்பரா இருக்குல்ல.. வாங்க தொடர்ந்து படிப்போம்.


வாரம் ஒரு முறையோ அல்லது வாரம் முழுவதுமோ.. போதிய அளவில் உடற்பயிற்சிகள் செய்தால் இதயத்திற்கு நல்லது நடக்கிறதாம். அதேபோல டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கிறதாம். தொடர் உடற்பயிற்சிகளால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் நல்ல பலன் கிடைக்குமாம்.


முன்பு போல பலருக்கும் தினசரி நேரம் ஒதுக்கி எதையும் செய்ய முடிவதில்லை. குறிப்பாக உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. காரணம், சமூக கட்டமைப்பும், நமது வேலை முறையும், நமது திட்டங்களும் நிறையவே மாறி விட்டன. வாழ்க்கை முறையும் அப்படி மாறிப் போயுள்ளது. எனவே வாரம் முழுக்க செய்ய முடியாவிட்டாலும் கூட வார இறுதி நாட்களில் மட்டுமாவது உடற்பயிற்சி செய்தால் போதுமானது. வாரம் முழுக்க செய்து கிடைக்கும் பலன்களையே, வார இறுதி நாட்களில் செய்தாலும் கூட நம்மால் பெற முடிகிறதாம்.


உடல் உழைப்பே இல்லையே




பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செருப்பு கிடையாது.. சைக்கிள் கிடையாது.. வாகனங்களும் கிடையாது.. மனிதர்களிடம் இருந்தது உழைப்பு மட்டுமே.. உடல் உழைப்பு மட்டுமே இருந்த அவர்கள் எங்கு சென்றாலும் நடந்தே சென்றார்கள். மரம் ஏறினார்கள், மலை ஏறினார்கள்.. கடுமையாக உழைத்தார்கள். உடல் ரீதியான ஆக்டிவிட்டி இல்லாத மனிதர்களையே அப்போது பார்க்க முடியாது. எந்த வயதானாலும் உடல் உழைப்பு இருந்து கொண்டே இருந்தது. இதனால் அவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாகவே இருந்துள்ளனர். அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்.. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மனிதர்களிடம் உடல் உழைப்பு  மிகுதியாகவே இருந்தது. ஆனால் இன்று மனிதர்களின் வாழ்க்கை தடம் புரண்டு போய் விட்டது, தடுமாறிப் போய் விட்டது.. மாறிப் போய் நிற்கிறோம்.


நவீனத் தொழில்நுட்பங்கள் நமது உடல் உழைப்பை காவு வாங்கி விட்டது. எழுவதும் இல்லை, நடப்பதும் இல்லை, குணிந்து நிமிர்வதும் இல்லை, உடலை வளைக்கவும் நம்மால் முடியவில்லை. விளைவு விதம் விதமான, டிசைன் டிசைனான வியாதிகள் மண்டிப் போய்க் கிடக்கின்றன. மாத்திரை மலைகளுக்குள் சிக்கி புதைந்து கொண்டிருக்கிறோம். நமது உடலை அசைய வைக்க கடுமையாக போராட வேண்டியுள்ளது. நம்மை நாமே ஆக்டிவாக வைத்துக் கொள்ள இன்னொருவர் தேவைப்படுகிறது. நாமாக எதுவுமே செய்யவில்லை. யாராவது வந்து யூடியூபில் வீடியோ போட்டு ஏதாவது செய்தால் அதைப் பார்த்து செய்யும் அளவுக்கு நம்மிடம் சோம்பல் மண்டிப் போய் விட்டது.


200 நோய்களிலிருந்து நிவாரணம்




இந்த நிலையில்தான் ஒரு புதிய ஆய்வு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லியுள்ளது. நீங்க வாரம் முழுக்க கஷ்டப்பட முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, வாரத்திற்கு 150 நிமிடமாவது உடல் உழைப்பைக் கொடுங்க. அதுவே 200 வகையான நோய்களிடமிருந்து உங்களைக் காக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்றவற்றிலிருந்து இந்த உடற்பயிற்சியால் நிவாரணம் கிடைக்கிறதாம்.


இங்கிலாந்தில் இதுதொடர்பாக சராசரியாக 62 வயதானவ 90,000 பேரிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர். அனைவரிடத்திலும் அவர்களது உடல் உழைப்பைக் கண்காணிக்கும் ஆக்சலரோ மீட்டர் பொருத்தப்பட்டு ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டனர். அதில் கிடைத்த டேட்டாவை வைத்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தனர்.


3 வகையான உடற்பயிற்சி




1. செயல்படாதவர்கள் - அதாவது வாரத்திற்கு 150 நிமிடங்களுக்கும் குறைவான உடற்பயிற்சி செய்தவர்கள்.


2. வார இறுதி செயற்பாட்டாளர்கள் - வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்தவர்கள்.             அதாவது வாரத்திற்கு அதிகபட்சம் 2 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்தவர்கள்.


3. முறையாக உடற்பயிற்சி செய்தவவர்கள் - இவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்தவர்கள். 


இதில் செயல்படாதவர்களுடன் ஒப்பிடுகையில் மற்ற இரு பிரிவினருக்கும் வியாதிகள் தொற்றும் அபாயம் குறைவாக இருந்ததாம்.  குறிப்பாக தூக்கமின்மை பிரச்சினை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு சற்று நிவாரணம் கிடைத்ததாம்.


மேலும் இவர்களுக்கு 200 வகையான நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.   அதேசமயம், வார இறுதியில் மட்டும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், தினசரி செய்பவர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்றும், இருவருக்குமே ஒரே மாதிரியான பலன்களே கிடைப்பதாகவும் சுவாரஸ்யமான தகவலும் கிடைத்துள்ளதாம்.


டாக்டர்களுக்கு சந்தேகம்




இருப்பினும் இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் மேலும் பல தரவுகள் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் இந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் சந்தேகமும் எழுப்பியுள்ளனர். டாக்டர் பிராட்லி செர்வர் என்பவர் கூறுகையில், இந்த ஆய்வை 62 வயது கொண்டவர்களிடம்தான் நடத்தியுள்ளனர். எனவே இதன் முடிவுகள் இளம் பிராயத்தினருக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆய்வு தொடரப்பட வேண்டும். அனைத்து வயதினரிடமும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்குத் தெளிவான தரவு கிடைக்கும் என்றார் அவர்.


விஞ்ஞானிகள் ஒரு பக்கம் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கட்டும்.. நாம என்ன பண்றோம்னா.. டெய்லி முடிஞ்சவரை வாக்கிங்கோ அல்லது ஜாகிங்கோ அல்லது ஏதாவது உடற்பயிற்சியோ செஞ்சுட்டிருப்போம்.. ஏன்னா நம்ம ஹெல்த்துக்கு நாமதான் பொறுப்பு பாஸ்.. ஓகேவா..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்