சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் எனும் புதுவித காய்ச்சல் நோய் பரவி வருகிறது. தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்ட் நைல் எனும் க்யூலெக்ஸ் வகை கொசுக்களிடம் இருந்து பரவுகிறது. இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை.முதன் முதலில் இந்நோய் 1937ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயினால் 2022ம் ஆண்டு ஒருவர் உயிழந்த நிலையில், தற்போது கேரளாவில் இந்நோய் பரவி வருகிறது.
இக்காய்ச்சல் வந்தவர்களுக்கு நரம்பியல் நோய்கள் ஏற்படலாம் என்றும், நோய் தீவிரமடையும் வரை அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் கொசுக்கள் கடிப்பதனால் பரவுகிறதாம். இந்நோய் டெங்கு, சிக்கன் குனியாவை போன்று கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறதாம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும்.
ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை உடையது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதாக வருமாம். ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழக மக்கள் கவனமுடன் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், வெஸ்ட் நைல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். இது, கொசுகள் மூலம் பரவுவதால் பொதுமக்கள் வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், வெஸ்ட் நைல் நோய்க்கு தடுப்பூசி இல்லை. ஆனால் முன்கூட்டியே கண்டறிந்தால் பாதிப்பிலிருந்து மீளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என பொது சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}