சென்னை: ஓடிடியில் இந்த வாரம் தமிழ் படங்கள் அதிகளவில் வெளியாகவுள்ளன. சந்திரமுகி2, இறைவன், கூழாங்கல், யாரோ, பரம்பொருள் ஆகிய தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வருகின்றன.
சினிமா இப்போது அடுத்த கட்டத்துக்குப் போய் விட்டது. ஒரு காலத்தில் தியேட்டரில் மட்டுமே படம் பார்க்க முடியும். பிறகு வந்தது விசிஆர்.. அதன் பின்னர் வந்தது டிவி.. இப்போது ஓடிடி வந்தாச்சு. தியேட்டரில் படம் ரிலீஸாகுதோ இல்லையோ கண்டிப்பாக ஓடிடிக்கு வந்தாக வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ரீச் ஆக முடியும்.
முன்பு அமேசான், நெட்பிளிக்ஸ் என சில தளங்களே இருந்தன. இன்று தடுக்கி விழுந்தால் ஏகப்பட்ட ஓடிடிகள் மீதுதான் விழ வேண்டியுள்ளது. மொழிக்கு ஒரு ஓடிடி என்று மாறி விட்டது காலம். ஓடிடியால் சினிமா பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழில் ஏகப்பட்ட படங்கள், வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் அதிகம் என்றே செல்லலாம். இந்த வாரம் சந்திரமுகி2, இறைவன், கூழாங்கல்,யாரோ, பரம்பொருள் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
சந்திரமுகி 2
நகைச்சுவைத் திகில் திரைப்படம் இது. பி.வாசு இயக்கத்தில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் வெளியான படம் சந்திரமுகி 2. ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன், கங்கனா ரனாத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தைப் போல இல்லை என்பது ஒரு குறைதான். இருந்தாலும் ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம்.. அதை விட முக்கியமாக படுத்துக் கொண்டே கூட பார்க்கலாம் என்பதுதான்.
யாரோ
சந்தீப் சாய் இயக்கத்தில் டேக் ஓகே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படம். வெங்கட் ரெட்டி, உபாசானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கூழாங்கல்
அறிமுக இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கிய முதல் திரைப்படம். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இத்திரைப்படத்தைத் தங்களது ரவுடி பிக்சர்சு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். இப்படத்தில் செல்லப்பாண்டி, கருத்தடையான் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
பரம்பொருள்
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா பர்தேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இறைவன்
அகமது இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் இறைவன். ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகி இருந்த இறைவன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இப்போது ரசிகர்களிடம் தியேட்டரை விட ஓடிடியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு டிவியில் படங்களை பார்ப்பது அவர்களுக்கு சுலபமாகிவிட்டது. இதனால் வாரம் தவறாமல் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. திரையங்கில் ரிலீஸ் ஆகும் போது எவ்வளவு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்குமோ அதே ஆர்வம் ஓடிடியில் வெளியாகும் போதும் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}