சென்னை: தனுஷ் ஆட்சேபித்த காட்சியுடன் நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் டாக்குமென்டரி வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவரது காதல் கதை, திருமணம், திரையுலக வாழ்க்கை குறித்த ஒரு டாக்குமென்டரியை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. இந்த டாக்குமென்டரி, நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வெளி வராமல் இருந்தது.

இந்த டாக்குமென்டரியில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், பாடல் காட்சியை சேர்க்க திட்டமிட்டிருந்தார் நயன்தாரா. ஆனால் அதற்கு படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அனுமதி தராததால் இது தாமதமாகி நேற்று நள்ளிரவு வெளியானது.
தனுஷ் வேண்டும் என்றே அனுமதி தராமல் இழுத்தடித்தார். இதனால்தான் இந்த டாக்குமென்டரி வெளியாக தாமதமானது. இந்தக் காட்சிகளை இடம் பெறச் செய்ததற்காக ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றெல்லாம் மிகப் பெரிய அறிக்கை விட்டு தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார் நயன்தாரா. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் நேற்று இந்த டாக்குமென்டரி வெளியானது.
இதில் தனுஷ் ஆட்சேபித்த காட்சி இடம் பெறாது என்றுதான் கூறியிருந்தார் நயன்தாரா. ஆனால் அந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடற்கரையில் நின்று பேசும் காட்சி அது. அதேபோல நடிகை ராதிகா சரத்குமார் தனுஷ் குறித்துக் கூறிய ஒரு கருத்து இடம் பெற்றுள்ளது. ராதிகா பேசும்போது, தனுஷ்தான் இதைப் பற்றி சொன்னார். எனக்குப் போன் செய்து அக்கா உங்களுக்கு ஏதாவது ஒரு வெக்கம் மானம் இருக்கான்னார். என்னய்யா சொல்றேன்னேன்.. என்னக்கா உங்களுக்கு எதுவுமே தெரியாதான்னார்.. யோவ் என்னய்யா நடக்குதுன்னேன்.. இந்த மாதிரி விக்கி, நயன்தாரா லவ் பண்றாங்கன்னார்.. what the hell are you saying அப்படின்னேன்.. எனக்கு நிஜமாவே ஒன்னுமே தெரியலை என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்.
.jpg)
இந்த டாக்குமென்டரியில் இயக்குநர்கள் அட்லி, நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பேசியுள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். நயன்தாராவின் பெற்றோரும் பேசியுள்ளனர்.
தனுஷ் ஆட்சேபித்த காட்சியுடன் இந்த டாக்குமென்டரி வெளியாகியுள்ளதால் புதிதாக ஏதாவது சர்ச்சை எழுமா, தனுஷ் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. அதேசமயம், நயன்தாராவின் அறிக்கைக்கே தனுஷ் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. தான் ஆட்சேபித்த காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியிருந்தால், சட்ட ரீதியான தனது நடவடிக்கையை மேலும் அவர் தீவிரப்படுத்தவே வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}