சென்னை: பாமக பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். தேர்தல் ஆணையமும் அதை அங்கீரித்திருக்கிறது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தன்னுடன் டாக்டர் ராமதாஸ் சமரசமாக போகாவிட்டால் மாம்பழம் சின்னத்தை முடக்கும் நிலை உருவாகும் என்பதை மறைமுகமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களிலும் அசைக்க முடியாத சக்திகளாக திகழ்ந்து வந்த பல கட்சிகள் உடைந்து சிதறியுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். பல மாநிலங்களில் மிகப் பெரிய சக்தியாக இருந்து வந்த கட்சிகள் எல்லாம் இப்போது துண்டு துண்டாகப் போய் விட்டன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சிகள் உடைந்து புதுக் கட்சிகள் என்று பிறந்தது என்றால் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக மட்டுமே. அக்கட்சியிலிருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதில் தினகரன் மட்டும் அமமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார். தலைவர்கள் விலகல் காரணமாக கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக பலவீனப்பட்டுக் கொண்டு வருகிறது அதிமுக. 2021ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களையும் அது இழந்துள்ளது. இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதையே நிறுத்தி விட்டது.
இந்த நிலையில் இன்னொரு முக்கியமான கட்சியில் மிகப் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. அதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராாமதாஸுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தின்போத மேடையில் வைத்தே பகிரங்கமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. டாக்டர் ராமதாஸின் அதிரடி நடவடிக்கையால் கட்சி உடையும் நிலையும் உருவாகியுள்ளது. டாக்டர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை இதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மேலும் ஒரு முக்கியமான விஷயத்தையும் அன்புமணி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இதுதான் பாமக உடையுமா என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அந்த முக்கியமான பகுதி இதுதான்..
பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யாவின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.
எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பது இதுதான்..
1. பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தலைவரைத் தேர்வு செய்ய முடியும்.
2. டாக்டர் ராமதாஸின் அறிவிப்பு கட்சி சட்டப்படி செல்லாது
3. தான் தான் முறைப்படி சட்டப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
4. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் தனக்கே உள்ளது.
அன்புமணியின் இந்த சுட்டிக் காட்டல், டாக்டர் ராமதாஸுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இப்போது கட்சித் தலைவர் நீக்கத்திற்கு அவர் அவசர பொதுக்குழுவைக் கூட்டியாக வேண்டும். ஆனால் பொதுக் குழுவில் அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என்று கூறப்படுகிறது. எனவேதான் அவசர பொதுக்குழுவை டாக்டர் ராமதாஸ் கூட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நானே தலைவர், தொடர்ந்து செயல்படுவேன், இன்னும் தீவிரமாக செயல்படுவேன் என்று அன்புமணி கூறியிருப்பதன் மூலம் அத்தனை சீக்கிரம் தான் விட்டுக் கொடுத்து விட மாட்டேன் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்துவதாக கருதப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் சமரசத்திற்கு வராவிட்டால் கட்சி உடைவதையும் தவிர்க்க முடியாது என்றே சொல்கிறார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் பாமகவின் சின்னத்தை முடக்கி விடும் வாய்ப்புகளும் அதிகம். ஒரு வேளை டாக்டர் ராமதாஸ் பாஜக கூட்டணிக்குள் வர முன்வராவிட்டால் அதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை ஈஸியாக கணித்து விடலாம்.
இரு தலைவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் யாருக்கும் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}