மதுரை: சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு மேட்டர் அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கூமாபட்டி.. சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் இந்தப் பெயர்தான்.. இப்போது அரசே இந்தப் பக்கம் வராதீங்க.. வதந்திகளை நம்பாதீங்க என்று சொல்லும் அளவுக்கு கூமாபட்டியை வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறது சமூக வலைதள சமூகம்!
கூமாபட்டி.. இயற்கையின் அழகுடன் கூடிய ஒரு கிராமம்.. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு அழகிய கிராமம்தான் கூமாபட்டி. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம், "கூமாபட்டி ஒரு தனித்தீவு", "ஊட்டி, கொடைக்கானல் வேண்டாம், கூமாபட்டி வாங்க" போன்ற வாசகங்களுடன் இதன் இயற்கை அழகு இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வத்திராயிருப்புக்கு மேற்கே சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இடையே அமைந்திருக்கும் கூமாபட்டி, சுற்றியுள்ள பசுமையான வயல்வெளிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய காட்சிகள், மற்றும் அதன் அருகில் உள்ள பிளவக்கல் அணை ஆகியவற்றால் தனித்துவமான இயற்கை அழகைக் கொண்டுள்ளது. பிளவக்கல் அணை, இயற்கையுடன் இணைந்த ஒரு அழகான இடம். இங்கு படகு சவாரியும், குழந்தைகள் பூங்காவும் உள்ளன.
கூமாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. வத்திராயிருப்பு, கூமாபட்டி, தம்பிபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம் போன்ற பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இங்கு நெல் கொள்முதல் நிலையங்களும் உள்ளன. சமீபத்தில் கூமாப்பட்டியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுவும் இந்தக் கிராமத்தின் அழகுக்கு அழகூட்டவுள்ளது.
கூமாப்பட்டியில் பல பழமையான கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது முத்தாலம்மன் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி தேர் திருவிழா நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். மிகவும் விசேஷமான கோவில் விழா இது.
சப்பானி முத்தையா கோயில் - இது ஸ்ரீ ஆறுமுகப்பெருமானின் கோயிலாகும். இங்கு மாசி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
சுப்பிரமணிய சுவாமி கோயில் - இந்த கோயிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். இங்கு கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கூமாபட்டி திடீரென இணையத்தில் டிரெண்ட் ஆனதற்கு முக்கிய காரணம், அப்பகுதி இளைஞர்களால் பகிரப்பட்ட வீடியோக்கள்தான். "கூமாபட்டி ஒரு தனி ஐலேண்ட்", "தண்ணி சர்பத் மாதிரி இருக்கு" போன்ற வசனங்களுடன் வெளியான இந்த வீடியோக்கள் பலரை கவர்ந்தன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு பதிலாக கூமாபட்டிக்கு வருமாறு அழைக்கும் விதமாக இந்த வீடியோக்கள் இருந்தன. இதனால், இந்த கிராமம் திடீரென அகில உலக அளவில் பிரபலமடைந்தது.
இணையத்தில் பரவும் வீடியோக்கள் பல ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பியிருந்த பிளவக்கல் அணையின் காட்சிகளைக் கொண்டவை என்றும், தற்போது அணைப்பகுதியில் தண்ணீர் குறைவாக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததால், ரீல்ஸ்களை நம்பி வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூமாபட்டி ஒரு அழகான கிராமம் என்பதில் சந்தேகமில்லை. அதன் இயற்கை எழிலையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் பாதுகாத்து, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சரியான திட்டமிடல் தேவை. அதேசமயம், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை மக்கள் நம்பி விடக் கூடாது. இது ஒரு அருமையான, இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் இந்த ஊரைக் கெடுத்து விடாத வகையில் மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}