சென்னை : தமிழக அரசியலில் சமீப காலமாக தற்குறி என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்சி பாரபட்சம் இல்லாமல், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், அடுத்த கட்சி தலைவரை விமர்சிக்கும் போது தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் மாற்றுக் கட்சியினரை விமர்சிக்கும்போது சொல்லாடலில் ஒரு நாகரீகம் இருக்கும், நயம் இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை. தாறுமாறான திட்டல்களும், வசை பாடல்களும்தான் அதிக அளவில் விமர்சன வார்த்தைகளாக மாறி நிற்கின்றன. காலம் மாறி விட்டதா அல்லது சகிப்புத்தன்மை போய் விட்டதா என்று தெரியவில்லை.
இன்றைய அரசியல் அரங்கில் அதிகம் பரிமாறப்படும் ஒரு விமர்சன வார்த்தை எது என்றால் தற்குறிதான். இதைச் சொல்லித்தான் பலரும் இன்று ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சிப்பதால், சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களும் தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதை பார்க்கும் பலருக்கும், அனைவரும் சொல்கிறார்களே இந்த தற்குறி என்றால் என்ன? இதற்கு என்ன தான் சரியான அர்த்தம்? என கேட்க துவங்கி விட்டனர். கேட்பதுடன் நிற்காமல் பலரும் கூகுளில் அதிகம் தேடும் வார்த்தையாகவும் தற்குறி, தற்குறி என்றால் என்ன ஆகியவை இடம்பிடித்துள்ளன.
எல்லோரும் தேடுகிறார்களே என தென்தமிழ்.காம் வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக (இது தெரியாதவர்களும் இருப்பார்கள்தானே) நாமும் தேடி பார்த்தோம். அதில் கிடைத்த விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இதை படித்த பிறகு உண்மையில் யார் தான் தற்குறி? என தீர்மானித்து, ஒரு முடிவுக்கு வரும் பொறுப்பை உங்களிடமே விடுகிறோம்...வாருங்கள் விளக்கத்தை பார்க்கலாம்.
ஒரு காலத்தில் படிப்பறிவு இல்லாத, எழுத படிக்க தெரியாதவர்களை குறிப்பிடும் வார்த்தையாக பயன்பாட்டில் இருந்தது தான் இந்த தற்குறி என்ற வார்த்தை. தன்+குறி=தற்குறி. அதாவது தனக்கென தனியான அடையாள குறியீடு இல்லாதவர் என்று அர்த்தம். ஏதாவது ஒரு ஆவணம் அல்லது ஒப்புதல் அளிப்பதற்கு கையெழுத்து இடும் முறை தற்போது வழக்கத்தில் உள்ளது. அதே போல் எழுத படிக்க தெரியாதவர்கள் கைரேகை அல்லது கைநாட்டு வைப்பார்கள். இது இப்போதுள்ள நடைமுறை.
ஆனால் பேனா மை, பேப்பர் போன்றவை பயன்படுத்தப்படுவதற்கு ஆவணங்களில், குறிப்பாக சொத்து தொடர்பாக செப்புப்பட்டயங்களில் கீறலிடும் நடைமுறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒருவரின் பெயரை எழுதி, கையெழுத்து போடுவதற்கு பதிலாக தனது கீற்றலை அடையாளமாக குறியிடுவார்கள். இப்படி கீறலை அடையாளமாக பயன்படுத்தியவர்களை தான் தற்குறிகள் என குறிப்பிட்டனர். அவரவர் கீறிய கிறுக்கல்களின் தனிப்பாணியை குறியீடாக கருதி அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது.
தனக்கென தனிக்குறியிட்டவர்களை, குறியை பயன்படுத்தும் முறையை தற்குறி என்றனர். காலப் போக்கில் இது மாறி படிப்பறிவு இல்லாதவர்கள், எதுவும் தெரியாதவர்கள், அறிவிலிகள் ஆகியோரை குறிப்பதற்காகவும், திட்டுவதற்காகவும், கடுமையாக விமர்சிப்பதற்காகவும் பயன்படுத்தும் சொல்லாக மாறி உள்ளது. அதாவது கை நாட்டு என்ற வார்த்தையை எப்படி படிப்பறிவில்லாதவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குப் பயன்படுத்தினார்களோ அப்படித்தான் இந்த தற்குறி என்ற வார்த்தையும் பயன்பாட்டில் இருந்து வந்தது. இப்போது அறிவிலிகளை குறிப்பிடும் வகையில் இதை பயன்படுத்துகிறார்கள்.
இப்ப அர்த்தம் புரிந்து விட்டதா.. சரி, இனிமேல் யாரையாவது விமர்சிப்பதாக இருந்தால் அர்த்தம் புரிந்து, அவர்களது உண்மையான அறிவுத்திறனை அறிந்து பின்னர் விமர்சியுங்கள்.. ஓகேவா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}