சென்னை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிந்துரைப்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இந்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து விலகி தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பிறகு அதிலிருந்து விலகி திமுகவுக்கு வந்து சேர்ந்தார், அமைச்சரும் ஆனார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தூசி தட்டி எடுத்தது அமலாக்கத்துறை. அவரை இந்த வழக்கில் பல மணி நேரம் விசாரித்து அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை.
கைது செய்யப்பட்ட அவருக்கு பின்னர் இருதய வால்வு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிறையிலேயே அடைபட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அமைச்சராக நீடித்து வந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். இதுவே அவருக்கு எதிராக மாறியது. அதாவது அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அவரது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்று ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் ஆர். என். ரவி ராஜினாமாவை ஏற்று இன்று உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துள்ளது. இனி அடுத்து செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக தரப்பில் அடுத்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க முயற்சிகள் முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது. அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகி விட்டதால் ஜாமீன் கிடைப்பதற்கு இருந்து வந்த பெரிய முட்டுக்கட்டை நீங்கி விட்டதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க திமுக தரப்பு தீவிரம் காட்டும். அதன் பின்னர் சிறிது கால ஓய்வுக்குப் பின்னர் அவரை கொங்கு மண்டல தேர்தல் பணிகளில் திமுக தரப்பு இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டிவாக களத்திற்குப் போய் அவர் பணியாற்றாவிட்டாலும் கூட கோவையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த செந்தில் பாலாஜிதான் பெரிதும் உதவினார். அதேபோல லோக்சபா தேர்தலிலும் அவர் அங்கு இருந்தால் நல்லது என்று திமுக கருதுகிறது. இதற்கிடையே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை சும்மா விடுமா அல்லது புதிதாக ஏதாவது தலைவலியைக் கொடுக்குமா என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பும் திமுக தரப்பில் உள்ளது.
செந்தில் பாலாஜி வெளியே வருவாரா.. வந்த பிறகு என்னென்ன நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே உள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}