சென்னை: கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகமாக இருந்து வரும் நிலையில், மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் இன்னும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் மே 4 ல் தொடங்கி மே 28 இல் முடிவடையும்.
கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அக்னி நட்சத்திரம் தான். இந்த அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பூமியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், போதுமான அளவு நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், தண்ணீர், போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும். இந்த அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்றும் மக்கள் அழைப்பதுண்டு.
ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி முடிவடையும். இந்த காலகட்டத்தில் வெயில் நேரடியாக பூமியில் விழும், அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே சித்திரை மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடத்த மாட்டார்கள்.

அதேபோல இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரையில் மொத்தம் 25 நாட்கள் நிலவுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துவர். ஆனால் தற்போது தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னரே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான மக்கள் தலைவலி, தலைசுற்றல், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது நிலவும் வெயிலை விட மே மாதம் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் இன்னும் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது நினைவிருக்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷ ராசியில் வலம் வருகிறார். இதன் காரணமாகவே சூரிய கதிர்கள் நம்மை தாக்குவதாலும், இந்த காலகட்டத்தில் வெயில் உச்சக்கட்டத்தை அடையும் எனவும் கூறுவர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}