Dr Ramadoss Vs Anbumani: பாமக இரண்டாக பிளவுபட்டால் என்னாகும்.. எந்த கட்சி கூட்டணிக்கு அழைக்கும்?

May 29, 2025,06:50 PM IST

சென்னை: பாமக பிளவை நோக்கிப் போக ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஒரு வேளை கட்சி உடைந்தால் எந்தக் கூட்டணிக்கு யார் போக வாய்ப்புள்ளது என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.


பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பற்றி புகார் தெரிவிப்பதும், அதை அவர் எதிர்ப்பதும், இவரும் மேடையில் வைத்து வெளிப்படையாகவே மோதிக் கொள்வதும், பிறகு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசி சமாதானம் செய்வதும் கடந்த சில மாதங்களாகவே பாமக கட்சிக்குள் வழக்கமாக நடந்து வந்தது. அரசியல் என்பதை தாண்டி அவர்களின் குடும்ப விவகாரம், மோதல் போக்கு வெளிப்படையாக தெரிய துவங்கியது. இதை இன்று டாக்டர் ராமதாஸ் ஓப்பனாகவே பேசி அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார்.


ஏற்கனவே பனையூரில் தனியாக அலுவலகம் திறக்க போவதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே டாக்டர் அன்புமணி கூறி இருந்தார். அதற்கு பிறகு நடந்த சமாதான பேச்சுவார்த்தை, நடவடிக்கைகளால் அவர் சற்று அமைதி காத்தார். தற்போது அன்புமணியின் செல்வாக்கை மொத்தமாக பாதிக்கும் வகையில் அவரை அமைச்சராக்கியதே பெரிய தவறு, பக்குவமில்லாதவர் என சொல்லும் அளவிற்கு போய் விட்டார் ராமதாஸ். இதற்கு பிறகும் அன்புமணி ராமதாஸ், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு கட்சியில் இருப்பாரா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாடு யார் கையில் என்பதில் அப்பா-மகன் இடையே பல மாதங்களாக மோதல் ஒரு பக்கம் போய் கொண்டிருக்கிறது. 




டாக்டர் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கூட அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். வெறும் 8 பேர்தான் வந்திருந்தனர். இது டாக்டர் ராமதாஸை அதிர வைத்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்ததாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். அதற்குத்தான் இன்று பதில் கொடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.


ஒருவேளை அன்புமணி ராமதாஸ் பாமக.,வில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்சி இரண்டாக பிளவு படும். அப்போது அன்புமணியின் ஆதரவாளர்களும் நிச்சயமாக கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். பாமக இரண்டாக உடைந்தால், நிச்சயம் அப்பா-மகன் இருவருமே தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் இறங்குவார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் இன்னும் அதிகமாகும். இப்போது பெரும்பாலான தொண்டர்களும், நிர்வாகிகளும் யார் பக்கம் போவார்கள்? யாருக்கு செல்வாக்கும், ஆதரவும் அதிகமாக இருக்கும்? என்பதை மொத்தம் தமிழக அரசியல் களமும் பேச ஆரம்பித்திருக்கிறது.


இது ஒருபுறம் இருக்க, பாமக தற்போது இருக்கும் குழப்பமான சூழலில் அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எந்த கட்சி முன்வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமக.,வா அல்லது ராமதாஸ் தலைமையிலான பாமக.,வா? இரண்டில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் நிச்சயம் அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்படும்.  தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக வலம் வந்தவர் டாக்டர் ராமதாஸ். அந்த அளவுக்கு தனது கட்சியை ஸ்டிராங்கான சக்தியாக மாற்றி வைத்தவர். அதற்காக அவர் கொடுத்த உழைப்பு அபரிமிதமானது, அசாாத்தியமானது. அதை யாரும் மறுக்க முடியாது.


அதேசமயம், அன்புமணி ராமதாஸ், தான் முதல்வரானால் என்னென்ன செய்வேன் என்பது தொடர்பாக பல விதமான செயல்பாடுகளை கட்சியினருக்கும், மக்களுக்கும் அவ்வப்போது காட்டி வந்தவர். பொது மேடையில் அடிக்கடி அதைப் பேசியும் வருபவர். அதனால் அவர் தலைமையிலான பாமக.,வை கூட்டணியில் சேர்த்தால் கண்டிப்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பல கடுமையான நிபந்தனைகளை அன்புமணி முன் வைக்க வாய்ப்புள்ளது. அவர் அதிரடி காட்டக் கூடியவர் என்பதால் அவரை கூட்டணிக்கு அழைக்க அனைத்து கட்சிகளுமே தயக்கம் காட்டவும் வாய்ப்புள்ளது.




அதே சமயம் ராமதாசின் அரசியல் அனுபவம், பக்குவம், பாரம்பரிய பாமக.,வில் இருக்கும் தொண்டர்களை அவர்களை தக்க வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றால் அவரை கூட்டணிக்கு அழைக்க சில கட்சிகள் முன் வரலாம். ராமதாஸ் கூட்டணியை விரும்பும் கட்சிகளின் பட்டியலில் முதலில் இருப்பது அதிமுக தான். அதே போல் ராமதாஸ் விரும்பவில்லை என்றாலும், வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சமூக ஓட்டுக்களை பெறுவதற்காக பாஜக.,வும் ராமதாசின் கூட்டணியை நாட வாய்ப்புள்ளது. திமுக.,வும் வன்னியர் ஓட்டுக்களை குறிவைக்கும் என்றாலும், ஏற்கனவே திமுக., கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக.,வின் வரவை நிச்சயம் எதிர்க்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் பாமக இல்லாமலேயே திமுக மிகப் பெரிய வெற்றியை ஏற்கனவே காட்டி விட்டது. இதனால் திமுக பாமகவை நாடிப் போக வாய்ப்பில்லை. அதேசமயம், பாமக முன்வந்தால் திமுக யோசிக்க வாய்ப்புள்ளது.


டாக்டர் ராமதாஸ் என்பதும், பாமக என்பதும் வெறும் பெயர்கள் அல்ல.. அது வட தமிழ்நாட்டின், கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய அரசியல் சக்தி என்பதால் பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் எந்த திசையில் போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!

news

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

news

எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!

news

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!

news

Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

news

தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?

news

"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!

news

சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

news

காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்