மனிதர்களின் முன்மாதிரி மாமனிதர்!

Dec 01, 2025,09:43 AM IST

- இரா. மும்தாஜ் பேகம்


கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுளாக்கப்பட்டுவிட்டனர்...


ஆனால் கடவுளைப்பற்றிச் சொன்ன,  கடவுளாக ஆக்கப்படாத ஒரே ஒரு மத தலைவர் யார் ?


ஒரு மதத்தை புனரமைத்த தலைவருக்கு 14 நூற்றாண்டுகளாக ஒரு சிலை இல்லையே, ஒரு உருவம் இல்லையே, யார் இவர் ?


இவரின் பெயர் 24 மணிநேரமும் உலகெங்கும் ஒலிக்கிறதே, யார் இவர் ? 


14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆகாத, ஒரே அரசியல் தலைவர், யார் ?




14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கப்படாத, ஒரே ஜனாதிபதி,  சக்கரவர்த்தி யார் ?


14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கப்படாத, ஒரே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி யார் ?


மனிதன் என்றால் தவறு வரும், அவன் எழுதும் புத்தகத்தில், அவனது கருத்தில் ஆண்டுகள் செல்லச்செல்ல, பல திருத்திய பதிப்புகள் வெளியிடுவார்கள். 


ஆனால் 14 நூற்றாண்டாக இவர் சொன்ன செய்தியான ஒரு நூல், எழுத்து, ஒலி, அர்த்தம் ஏதும் பிசகாமல், மாற்றத்திற்கு அப்பாற்பட்டு, மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல், அப்படியே இருக்கிறதே... திருத்திய, திருத்தப்பட்ட, விரிவாக்கப்பட்ட, சுருக்கப்பட்ட, பிழை நீக்கப்பட்ட பதிப்பே இல்லாமல், இன்றுவரை "திருக்குர்ஆன்" என்ற பெயரில் இருக்கிறதே?


இது கடவுளின் வாக்கியங்கள் இல்லையா?


காலத்திற்கு ஏற்ப மாறாமல், மாற்ற அவசியம் இல்லாமல், அப்படியே இருகிறதே, அதன் பொருளும், அர்த்தமும், எல்லா காலத்திற்கும் பொருந்தி வருகிறதே, அறிவியலை மிஞ்சுகிறதே இந்த நூல்...அது எப்படி ?


இதை எப்படி  எழுதப்படிக்கத் தெரியாத ஒரு நபர் சொல்லி இருக்க முடியும் ? அதுவும் 6ம் நூற்றாண்டில் ?


இவர் கால் பதிக்காத இடத்திலெல்லாம், இவர் சொன்ன கொள்கைகள் எப்படி கால் பதித்தது ? 


அதுவும் அறிவியல் வளர்ச்சியே இல்லாத அந்த காலத்திலேயே...


சிந்தியுங்கள், எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதர் சொன்ன செய்தி, இன்றும்  உலகெலாம் பரவி, விரிந்து வளர்ந்துகொண்டிருக்கிறது...


என்ன காரணம் ?


எப்படி 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர் 21 ம் நூற்றாண்டில் -நடக்கும் செய்திகளை, அப்படியே முன்னறிவிப்பு செய்திருக்க முடியும்?


தன் தாய் மொழியில் எழுத படிக்க தெரியாத ஒருவர், அம்மொழியின் இலக்கணத்தை வரையறுக்கிறார், எப்படி சாத்தியம் ?


அரபு மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் சொன்ன நூலில் (திருகுர்ஆனில்) இருந்து அரபு இலக்கணம் வருகிறது ..


இதை எல்லாம் மீறி, இவரை ஒரு சமூக சீர்திருத்த வாதிகளின் தந்தை என்று அழைக்கிறார்கள் என்றால், இவர் சொன்ன சட்டங்கள், செய்திகள் அறிவுரைகள், இன்றும் உலகம் முழுக்க பின்பற்ற படுகிறதே, யார் இவர்கள்?


உருவத்தில் வாழாமல், 200 கோடி இதயத்தில் வாழும், யார் இவர்கள் ?


திருக்குரான் இறைவனின் வாக்கியங்களேயாகும்.


"திருகுர்ஆன்" தமிழ் பதிப்பு இருக்கிறது. விரும்புபவர்கள் படித்துப்பாருங்கள்.


அரேபிய துணை கண்டத்தின் ஜனாதிபதி, பேரரசர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, இஸ்லாமிய மார்க்கத்தை புனரமைத்த தலைவர்,  சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தை, நாணயமான வணிகர், தத்துவவாதி, வாய்மையான பேச்சாளர், போர் வீரர், 

இராணுவ தலைவர், கொடையாளி, மனிதநேய செம்மல், சிறந்த குடும்பத்தலைவர், அகிலத்தின் அருட்கொடை பெருமானார் 

நபிகள் நாயகம் அவர்கள், மனிதர்களின் முன்மாதிரி மாமனிதர். இறைவனின் இறுதி தூதுவர், நபிகள் நாயகம் அவர்கள்.


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT

news

அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!

news

கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell

news

சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

அதிகம் பார்க்கும் செய்திகள்