கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா, பான்டிங், பிளமிங், ஜஸ்டின் லாங்கர்.. இவர்களில் யார் அடுத்த ராகுல் டிராவிட்??

May 16, 2024,06:00 PM IST
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் இந்தியரா அல்லது வெளிநாட்டுக்காரரா என்ற பொதுவான கேள்வியைத் தாண்டி இப்போது, இவர்களில் யாராக இருக்கும் என்ற அடுத்த கட்ட விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வந்து, அருமையான ஆட்டக்காராக இருந்து அசத்திய ராகுல் டிராவிட் தற்போது அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் பதவியில் நீடிக்க ராகுல் டிராவிட் விரும்பவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரைத் தேடவுள்ளது பிசிசிஐ.

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது தொடர்பான விவாதம் சூடு பிடித்துள்ளது. பலரது பெயர்கள் இதில் அடிபடுகின்றன.



முன்னாள வீரர் வி.வி.எஸ் லட்சுமண் பெயர் முதன்மையாக அடிபடுகிறது. இவர் ராகுல் டிராவிட் காலத்தில் தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்தவர். மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இவரது பெயர் கடந்த முறையே அடிபட்டது. ஆனால் பயிற்சியாளர் பதவியை வகிக்க லட்சுமணுக்கு விருப்பம் இல்லை என்று ஒரு தகவல் கூறுகிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலைமைப் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் பெயர் அடிபடுகிறது. இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டது முதலே அதன் பயிற்சியாளராக நீடித்து வரும் ஸ்டீபன் பிளமிங், முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர், முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரின் பெயர்களும் பயிற்சியாளர் பதவிக்குரிய போட்டியில் அடிபடுகிறது.

இவர்களை விட முக்கியமாக அடிபடுவது ரிக்கி பான்டிங் பெயர்தான். முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன். 2 முறை உலகக் கோப்பையைத் தட்டிக் கொடுத்தவர். அதிரடியான கேப்டனாக மட்டுமல்லாமல் அட்டகாசமான பேட்ஸ்மேனாகவும் அசத்தியவர்  சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கர் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார் பான்டிங். முன்பு மும்பை ஐபிஎல் அணியுடன் இணைந்திருந்த ரிக்கி பான்டிங் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

இதேபோல கெளதம் கம்பீர் பெயரும் வலுவாக அடிபடுகிறது.  மறுபக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் பந்து வீச்சாளருமான ஆசிஷ் நெஹ்ராவின் பெயரும் அடிபடுகிறது. போட்டிக் களத்தின்போது இவரது செயல்பாடுகள் பலரையும் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பேசப்படும் வீரர்களில் ரிக்கி பான்டிங் மற்றும் ஸ்டீபன் பிளமிங்கின் பெயர்கள்தான் அதிகமாக அலசப்படுகின்றன. இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.  பயிற்சியாளர் பதவிக்கு மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன் பிறகுதான் ஒரு தெளிவு கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்