மும்பை : மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிந்து, அமோக வெற்றியை மகாயுதி கூட்டணி பெற்றாலும், அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் இன்னும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் புதிய அரசு பதவியேற்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 232 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில், பாஜக மட்டும் 132 இடங்களிலும், சிவ சேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது இந்த மூன்று கட்சிகளில் இருந்த யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது.
பட்னாவிஸை முதல்வராக்க பாஜக விருப்பம்
தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வராக வேண்டும் என பாஜக நினைக்கிறது. இவர் கடந்த அமைச்சரவையில், துணை முதல்வராக இருந்தவர். அதற்கு முன்பு முதல்வராகவும் பதவி வகித்தவர். மகாராஷ்டிர அரசியலில் அதிக அனுபவம் மிக்கவர் என்பதால் இவரை முதல்வராக்க வேண்டும் என பாஜக கூறி வருகிறது. ஆனால் மகாயுதி கூட்டணி இந்த அளவில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் சிவ சேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தான் முதல்வராக வர வேண்டும் என சிவ சேனா கூறி வருகிறது. மற்றொரு புறம், அஜித் பவாரை முதல்வராக்க வேண்டும் என அக்கட்சி கூறி வருகிறது.
முதல்வர் யார் என்பது பற்றி முடிவு செய்வதற்காக இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஆலோசனை நடத்தியதில் முடிவு எட்டப்படவில்லையாம். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்ததிலும் முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகிய மூன்று தலைவர்களும் டில்லி சென்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதில், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை மூன்று கட்சிகளும் வகிக்க முடிவு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
பட்னாவிஸுக்கு அஜீத் பவார் ஆதரவு
மகாராஷ்டிர முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் படி தேவேந்திர பட்நாவிஸ் தான் முதல்வர் போட்டியில் முந்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே ஏற்கனவே முதல்வராக இருந்தவர் என்பதாலும், அவரது தலைமையில் மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்தால் அது சிறப்பாக இருக்கும் என்றும் சிவ சேனா கருதுகிறது. ஆனால் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பட்னாவிஸ் தலைமையிலான அரசில் ஏக்நாத் ஷிண்டே செயல்பட வேண்டும் என சொல்லி உள்ளதால் சிவ சேனாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது சற்று குழப்பமான நிலையில் தான் உள்ளது.
கூட்டணியில் அதிக வெற்றியை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பார்த்தால் பாஜக எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும். ஏக்நாத் ஷிண்டே உடன் பாஜக.,விற்கு ஏற்கனவே சில கருத்து வேற்றுமைகள் உள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரசுடன் பாஜக.,விற்கு எப்போதுமே நல்லுறவு உள்ளது. இதனால் அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்தால் அது பாஜக.,விற்கு அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும் என பாஜக நினைக்கிறது. கூட்டணி கட்சிகளுக்குள் நடக்கும் இந்த குழப்பம் மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து பதற்றமான நிலையையே நீடிக்க வைக்கிறது.
அதேசமயம், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஷிண்டே மீண்டும் முதல்வராகக் கூடாது என்று அஜீத் பவார் கருதுகிறாராம். இதனால் அவர் பட்னாவிஸை மீண்டும் முதல்வராக்கலாம் என்று பாஜக தரப்பிடம் கூறியுள்ளாராம். தனக்குப் பதவி கிடைக்காவிட்டால் பட்னாவிஸை ஆதரிக்க அவர் முடிவு செய்துள்ளதால் பாஜகவுக்கு தலைவலி சற்று குறைந்துள்ளதாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}