சென்னை: பீம்ஜோதி என்பது அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.. இதற்கு காவல்துறை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள். அம்பேத்கருக்கு நீங்கள் எதிராக இருக்கிறீர்களா. அம்பேத்கருக்கு எதிராக இருக்கிறோம் என்று நீங்கள் பிரகடனப்படுத்துங்கள். இல்லையென்றால் ஜோதியை அனுமதியுங்கள் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மீன் பிடி தடைக்காலம் விஞ்ஞானபூர்வமாக அக்டோபர் மாதமாக இருக்க வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஞ்ஞான பூர்வமாக எப்போது தடை விதிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து அதன்படி அவர்களுக்கு உதவ வேண்டும். இன்னொன்று மீனவர்களுக்கு நிவாரணமாக 8000 ரூபாய் கொடுக்கிறீர்கள். அதனை 15,000 ஆக உயர்த்த வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய விலைவாசி ஏற்றத்தில் மீனவ சகோதரர்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள். காசிமேடு துறைமுகத்தில் அவர்களுக்கான ஸ்வைப் கார்டு ஒரு மாதமாக வேலை செய்யாமல் இருக்கிறது.மீனவர்கள் நலனை நீங்கள் எப்படி பாதுகாக்கிறீர்கள்.
ஆனால் அதே நேரத்தில் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்கள் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முதலமைச்சர் துணைவேந்தர் மாநாட்டை நடத்துகிறேன் என கூறுகிறார். ஒன்றே ஒன்று மட்டும் முதலமைச்சர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இதற்கு முன்னால் அரசியல் சாயம் உள்ளவர்களை துணை வேந்தர்களாக நியமித்தீர்கள். அரசியல் சாயமுடையவர்களை துணைவேந்தர்களாக நியமித்தீர்கள் என்றால் பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். கல்வியாளர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் எதையும் அரசியல் ஆக்கி தான் உங்களுக்கு பழக்கம். மாணவர்களை ஒழுங்காக படிக்க விடுங்கள். நல்ல திட்டங்களை பின்பற்ற விடுங்கள் என்பதைத்தான் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இன்று பாரதிய ஜனதா கட்சியில் பாரத பிரதமர் அவர்கள் பட்டியலின மக்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் மூத்ரா கடன் வங்கியில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டியலின சமூகத்தினர்களுக்கு 44,000 கோடி ரூபாய் அவர்களுக்கு உதவித்தொகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக மாநில அரசு பட்டியலின மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் பட்டியலின சகோதரிகளின் ஹாஸ்டல்களை சென்று பாருங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று. முதலில் முதலமைச்சர், தமிழக மக்களை பாருங்கள் . அங்க பாரு இங்க பாரு என்று கூறாதீர்கள். அமைச்சர் பொன்முடி என்ன பேசினார். ஒரு அமைச்சர் என்றால் அத்தனை மக்களுக்கும் பிரதிநிதி அவர். தமிழக மக்களுக்கு பிரதிநிதி என்றால் பெண்களுக்கும் பிரதிநிதி தான். பெண்களை மிகவும் மோசமாக அதிகமாக பேசிய பொன்முடி எப்படி அமைச்சரவையில் இருக்க முடியும்.
கனிமொழி என்ன சொல்கிறார் என்றால் அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கட்சியிலிருந்து நீக்குவது மட்டும் பெருசல்ல. கட்சி மட்டும் பெண்களுக்கு பிரதிநிதி அல்ல. தமிழக பெண்களுக்கும் பிரதிநிதி தான்.. அதனால் பெண்கள் பொன்முடியை அமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை பெண்களுக்கு எதிரானவர் என்ற முத்திரையை நாங்கள் குத்துவோம். அதுதான் சரியாக இருக்கும்.
பீம்ஜோதி என்பது அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.. இதற்கு காவல்துறை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள். அம்பேத்கருக்கு நீங்கள் எதிராக இருக்கிறீர்களா. அம்பேத்கருக்கு எதிராக இருக்கிறோம் என்று நீங்கள் பிரகடனப்படுத்துங்கள். இல்லையென்றால் ஜோதியை அனுமதியுங்கள். ஏன் பீம்ஜோதியை எதிர்க்கிறீர்கள் தடுக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். அம்பேத்கருக்கு எதிராக இருக்கிறீர்கள்.
பொன்முடி போன்றவர்கள் எல்லாம் பேச விட்டு விடுவீர்கள். எங்களை ஜோதியை எடுத்துச் செல்ல வேண்டாம் என கூறுவது என்ன அர்த்தம். இந்த ஜோதி தமிழக முழுவதும் செல்ல வேண்டும் இதற்கு நீங்கள் தடை விதித்தீர்கள் என்றால் மரியாதைக்குரிய அம்பேத்கர் அவர்களுக்கு நீங்கள் எதிரானவர்கள். இதை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள் இதைத்தான் நாங்கள் சொல்வோம். இன்று இந்த ஜோதியை கையில் பிடிக்க ஒரு கட்சிக்கு தகுதி இருக்கிறது என்றால் அது பாரதிய ஜனதா கட்சிக்கே என கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}