டில்லி : தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டில்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்களை மட்டுமின்றி, செய்தியாளர்களையும் சந்திக்காமல் சென்னை திரும்பி உள்ளது மிக முக்கியமான பேசு பொருளாகி உள்ளது. அதோடு விஜய் எப்போது தான் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபித்து, வெற்றி பெற்றார் தமிழக முதல்வர் விஜய். முதல்வராக பதவியேற்ற கையோடு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நேராக அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்து வந்தார் விஜய்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகவும், ஆரோக்கியமான அரசியலுக்கு துவக்கமாக அமைந்துள்ளதாக அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. பாஜக மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர மற்ற அனைவரையும் விஜய் சந்தித்தார்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற 20 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக, நேற்று முன்தினம் காலை டில்லி புறப்பட்டு சென்றார் விஜய். மாலையில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் நேரில் அளித்து விட்டு வந்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்கவில்லை. அதே போல், விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் வந்திருந்ததால், டில்லி செல்லும் போது விஜய், ராகுலை சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட எந்த காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திக்கவில்லை.
முக்கிய அரசியல் தலைவர்களை தான் சந்திக்கவில்லை. குறைந்தபட்சம் செய்தியாளர்களையாவது சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. வழக்கமாக தமிழக முதல்வர்கள் டில்லி சென்று பிரதமரை சந்திக்கும் போது, அந்த சந்திப்பு குறித்தும், டில்லி பயணம் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பது ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் டில்லி சென்ற போதும் செய்தியாளர்களை சந்தித்து விட்டு தான் வந்துள்ளனர். ஆனால் அந்த மரபை உடைக்கும் விதமாக டில்லியிலும் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல், இன்று காலையிலேயே தனது டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பி உள்ளார்.
சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. டில்லி சென்றால் அங்கும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. முதல்வராகி இத்தனை நாட்கள் ஆகியும் விஜய் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கிறார். எப்போது தான் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்வி தற்போது பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது.
அடுத்தவர்களுக்கு உதவுதல் (Giving/ Helping others as Worship)
ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?
Karnataka Power Trasnsition: கர்நாடகாவில்.. சித்தராமையா விலகுகிறார்.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்
CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!
டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!
மேகதாது அணை பூமி பூஜையை அனுமதிக்கக் கூடாது.. பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
சூலூர் சிறுமி கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
இனி நமக்குள் பிரிவில்லை.. இது எஃகு கோட்டை.. யாராலும் தகர்க்க முடியாது: அதிமுக ஐடி விங்
{{comments.comment}}