சென்னை : தமிழகத்தில் பலமில்லாமல் இருப்பதாக சொல்லப்பட்ட என்டிஏ கூட்டணி, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பிறகு மிகவும் பலமாகி, தொகுதி பங்கீடு ஒரு புறம், கூட்டணி பேச்சு மறுபுறம், தேர்தல் பிரச்சார வேலைகள் ஒரு புறம் என படுபிஸியாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் பலமாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த திமுக கூட்டணியில் கலகம் ஏற்பட்டுள்ளது காங்கிரஸ், திமுக தலைவர்களின் பேச்சுக்களில் இருந்து வெளிப்பட துவங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை மிக மோசமாக விமர்சித்து பேசி இருந்தார் திமுக., நிர்வாகியான தளபதி. பதிலுக்கு, நாக்கை அடக்கி பேசுங்கள் என காங்கிரசின் மாணிக்கம் தாகூரும் பேசி உள்ளார்.இதற்கு நடுவில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக பக்கம் செல்லலாம் என்ற குரலும், திமுக கூட்டணியிலேயே தொடரலாம் என்ற மோதலும் காங்கிரசிற்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம். காங்கிரஸ், திமுக கூட்டணிக்குள் மோதல்கள் இருப்பது புதியது கிடையாது என்றாலும், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வெளிப்படையாக தெரிய என்ன காரணம் என யோசித்தால், திமுக கொடுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி தான் என அரசியல் வட்டார தகவல்கள் சொல்கின்றன.

அதாவது, திமுக தலைமையிடம் காங்கிரஸ் கேட்டது 63 சீட்கள். ஆனால் 19 தான் தர முடியும் என திமுக உறுதியாக சொல்லி வந்ததாம். இவ்வளவு குறைவான சீட்டுகளா என அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், திமுக தலைமையிடம் தொடர்ந்து கூடுதல் சீட்கள் தர பேசி வந்துள்ளது. ஒரு வழியாக பேசி பேசி கடைசியில் ஒரு டீலுக்கு ஓகே சொல்லி உள்ளனர். காங்கிரசிற்கு 28 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என பேசி பைனல் செய்து விட்டார்களாம் திமுக. ஆனால் 28 சீட்டுக்கு பதிலாக ரவுண்டாக 30 ஆக தரும் படி தொடர்ந்து காங்கிரஸ் கேட்டு வருகிறதாம். ஆனால் திமுக முடியாது என மறுத்து வருகிறதாம்.
குறைவான சீட் என்ற அதிர்ச்சியில் இருந்து காங்கிரஸ் மீளுவதற்குள் அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாம் திமுக. அதாவது, 28 சீட் என்பது காங்கிரசிற்கு மட்டும் கிடையாதாம். அதிலும் ஒன்றிரண்டு சீட்கள் சிறிய இஸ்லாமிய கட்சிகளுக்கு ஒதுக்கி தர வேண்டும். அவர்கள் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை போல் இந்த முறை கை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என திமுக சொல்லி உள்ளதாம். இது காங்கிரஸ் எதிர்பார்க்காத ட்விஸ்ட். அது மட்டுமல்ல, திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளையே காங்கிரசிற்கு ஒதுக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகள் எவை என்பதை அதிமுக மற்றும் பாஜக.,வும் கணித்து, அதற்கு ஏற்ற வேட்பாளர்களை நிறுத்தினால் நிச்சயம் காங்கிரஸின் தோல்வி உறுதியாகி விடும்.
வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிட்டால் ஏற்கனவே இருக்கும் 18 எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை மேலும் குறைவதற்கே அதிக வாய்ப்புள்ளது. திமுக தலைமை தங்களின் ஏமாற்றி, நெருக்கடியில் தள்ள பார்க்கிறது என காங்கிரஸ் பலரும் கொந்தளித்து கொண்டிருக்கிறார்களாம். இந்த சமயத்தில் தளபதி வேறு, காங்கிரசை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளது காங்கிரன் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளதாம். திமுக தலைமை மீதான அதிருப்தி தான் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் இந்த அடுத்தடுத்த கருத்து பதிவிற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற நிலை நிலை ஏற்பட்டுள்ளது.
காலம் எனும் மரம்!
அஞ்சா மங்கை.. வீரத் தளபதி குயிலி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
தானத்தில் சிறந்த தானம்!
புன்னை மரம்!
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
தியேட்டர்களை விழுங்கப் போகிறதா ஓடிடி.. OTT vs Theatre!
{{comments.comment}}