குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??

Nov 15, 2025,01:26 PM IST

சென்னை: "குழந்தைகளை கொண்டாடுவோம்"  என்பது சொல்லாகவே நிற்கிறது...  இது வருத்தமும், வேதனையும் தருகிறது. ஏமாற்றத்தைக் கொடுக்கிறது என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை.


குழந்தைகள் தினத்தை நேற்று நாடு முழுக்கக் கொண்டாடினர். அதேசமயம் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கொண்டாட்டமும் இல்லையாம். மாணவர்களுக்கு இனிப்பு கூட வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்த ஆசிரியை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், 




சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு நடவடிக்கையாக பள்ளியில் உறுதிமொழி ஏற்பு 

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

புகை இல்லா பொங்கல் கொண்டாடும் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

பள்ளி தூய்மை உறுதிமொழி

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி


மாணவர் மனநலம் பேணும் ஆலோசனை கூட்டம்

வானவில் மன்றம்

சிறார் மன்றம்

மகிழ்முற்றம்

சுற்றுச்சூழல் மன்றம்..


என பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு... மாணவர் மையமாக கொண்டு... 


கல்வி வளர்ச்சி நாள்

அரசியல் தலைவர்கள் பிறந்த நாள்

முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாள்


என பல்வேறு தினங்களில் மாணவர்களுக்கு பள்ளியில் இனிப்பு பொங்கல்...

 

மாணவர்களை வைத்து அனைத்து நாட்களையும் கொண்டாடும் சமூகத்திற்கு மாணவர்களை கொண்டாடும் குழந்தைகள் தின நாளில் பள்ளிகளில் இனிப்புகள் வழங்க வாய்ப்பு இல்லாமல் போனது ஏனோ??


குழந்தைகள் தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் மாணவர்களை மகிழ்விக்க "கலைநிகழ்ச்சிகள்" பள்ளியில் நடத்த உத்தரவு வழங்காதது ஏனோ?? அரசுப் பள்ளிகளில் இதை செய்யாமல் விட்டது ஏமாற்றம் தருகிறது.


நாள்தோறும் புத்தகப்பை சுமக்கும் மாணவர்களின் மகிழ்ச்சியை இந்த நாளில் கவனிக்காதது ஏனோ?? என்று அவர் வினவியுள்ளார். அதேசமயம், தனியார் பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கு நிச்சயம் அது உற்சாகமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அத்துணை அழகா புன்னகை.... ?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??

news

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை?

news

அதிர்ஷ்டம்

news

விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

அதிகம் பார்க்கும் செய்திகள்