வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதால், முன் கூட்டியே சிசேரியன்களைச் செய்ய இந்திய வம்சாவளியினரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமெரிக்காவில் இயற்கையான குடியுரிமை அல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்ததை ரத்து செய்து அறிவித்தார்.

புதிய அமெரிக்க குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படாது என்ற அறிவிப்பால், பிற நாட்டு வம்சாவளியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்காத நிலை ஏற்படும்.
இதனால் அமெரிக்காவில் வாழும் பலரும் முன்கூட்டியே பிரசவத்துக்கு முயல்கின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வாழும் அமெரிக்காவில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் சிசேரியன் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது 8 மாதத்திலேயே சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவிக்க இந்தியப் பெண்கள் அவசரம் காட்டுகின்றனராம். ஆனால், இப்படி முன்கூட்டியே சிசேரியன் செய்வதால் தாய்க்கும் குழந்தைக்கும் பல்வேறான பதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, சிசேரியன் மூலமாக முன் கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் பல சிக்கல்களும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் கூறியதை கேட்ட பின்னரும் கூட, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்காக, 8 மற்றும் 9வது மாதத்தில் கர்ப்பிணியாக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் பெற்றோர்கள் பலரும் சிசேரியன் செய்ய அவசரம் காட்டுகின்றனராம்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், முன்கூட்டியே பிரசவத்திற்காக மருந்துகள் மூலம் வலி உண்டாக்கப்படுகிறது. ஒருவேளை செயற்கை வலி ஏற்படவில்லை என்றால், சிசேரியன் செய்யப்படுகிறது. இவ்வாறு சிசேரியன் செய்யப்படும் போது தாயின் வயிற்றில் பெரிய கீறல்கள் ஏற்படும். இந்த கீறல்களினால் அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்படுவதுடன், தாயின் எதிர்கால கர்ப்பங்களையும் இந்த சிசேரியன் சிக்கலாக்குகிறது.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தாயிடமிருந்து குழந்தையை வெளியே எடுப்பதால் குழந்தைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, பெருமூளை வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள், அத்துன் வளர்ச்சியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் இன்னும் என்னவெல்லாம் கூத்தை அரங்கேற்றப் போறாரோ!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}