மும்பை : பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவின் தந்தை அனில் மேத்தா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கடைசியாக நடந்தது என்ன, அவர் என்ன பேசினார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகை மலாய்கா அரோராவின் தந்தை அனில் மேத்தா செப்டம்பர் 08ம் தேதி காலை மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள 6வது தளத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து மலாய்கா அரோரா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்டிலும், இந்த இழப்பால் தங்களின் குடும்பமே கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலாய்கா அரோராவின் தந்தை அனில், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய இரு மகள்களுக்கும் போன் செய்து பேசி உள்ளார். அப்போது தான் சோர்வாக இருப்பதாக கூறியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கடைசியாக என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணை தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையின் போது மலாய்காவின் தாய் ஜோய்சி கூறுகையில், அந்த சம்பவம் நடந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன். காலை 9 மணியளவில் வரவேற்பு அறையில் அவரது செருப்பும், அவரும் இருந்ததை பார்த்தேன். ஆனால் அதற்கு பிறகு நான் வேலையாக உள்ளே சென்றதால் அவர் பால்கனிக்கு சென்றதை நான் பார்க்கவில்லை.
சிறிது நேரத்தில் கீழே இருந்து செக்யூரிட்டி உதவி கேட்டு சத்தம் போட்டார். அவரது குரல் கேட்டதால், ஏதோ பிரச்சனை போல என்று தான் வெளியில் வந்து பார்த்தேன். அப்போது தான் இந்த விபரீதம் நடந்தது எனக்கு தெரிந்தது. அவர் பால்கனியில் இருந்து குதிப்பதற்கு முன்பாக, இரு மகள்களிடமும் போனில் பேசி உள்ளார். அப்போது, தான் சோர்வாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது மலாய்கா அரோரா புனேவில் இருந்துள்ளார்.

மும்பையின் தானே பகுதியில் பிறந்த மலாய்கா அரோராவின் தந்தை பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவர். இந்தியன் மெர்சன்ட் நேவியில் பணியாற்றியவர். அவரது தாய் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். மலாய்காவிற்கு 11 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மலாய்காவும், அவரது சகோதரியும், தாயுடன் சென்று விட்டனர். இருந்தாலும் அடிக்கடி தங்களின் தந்தையையும் அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
மலாய்காவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிந்ததும் அவரது முன்னாள் கணவர் அர்பாஸ் கானும், முன்னாள் காதலர் என சொல்லப்பட்டு வந்த அர்ஜூன் கபூரும் அனில் மேத்தா தற்கொலை செய்து கொண்ட அப்பாட்மென்டிற்கு நேரில் சென்று மலாய்காவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}