- ஈரோடு மாலதி
நவராத்திரி என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல; அசுரர்களை அழிக்க மும்மூர்த்திகளும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அனைத்து தேவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் போரின் வெற்றியைக் குறிக்கும் ஆன்மீக விழாவாகும். இந்தத் திருவிழாவின் புராண பின்னணியும், அதன் சிறப்புகளும் ஆன்மீக கலாச்சாரத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பண்டைக்காலத்தில் சும்பன் மற்றும் நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் கடுமையான தவம் புரிந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் பல வரங்களைப் பெற்றனர்.
தங்களுக்கு தேவர்களாலோ அல்லது ஆண்களாலோ எந்த மரணமும் நேரிடக்கூடாது என்றும், தங்களை அழிக்க வேண்டுமென்றால் ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே முடியும் என்ற வரத்தையும் பெற்றனர். இந்த வரத்தின் செருக்கால் மூவுலகையும் ஆட்டிப்படைத்து, தேவர்களைத் துன்புறுத்தினர்.
தேவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். அவர்களின் துயர் துடைக்க மும்மூர்த்திகளின் சக்தியால் ஒரு கன்னிப் பெண் உருவானார். அவர்தான் பார்வதி தேவியின் அவதாரமான அங்காள பரமேஸ்வரி அல்லது துர்க்கை தேவி.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இதர தேவர்கள் தங்களது சக்திவாய்ந்த ஆயுதங்களை அந்தத் தேவிக்கு வழங்கினர். தேவியுடன் ஒன்பது பெண் தெய்வங்களும் (நவ துர்க்கைகள்) இணைந்து கொண்டனர். மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி உள்ளிட்ட ஒன்பது ரூபங்களில் தேவி வெளிப்பட்டார்.
அங்காள பரமேஸ்வரி ஒரு கன்னிப் பெண்ணாக அசுரர்களின் முன் தோன்றியவுடன், அவர்கள் அத்தேவியை மணக்க ஆசைப்பட்டனர். அதற்குத் தேவி, "என்னை மணப்பவர்கள் என்னுடன் போர் புரிந்து வெற்றி பெற வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார். போர் தொடங்கியது:
அசுரர்களின் படைத் தளபதிகளான சண்டன், முண்டன் மற்றும் அவர்களது 60,000 படைகளைத் துர்க்கா தேவி தனது சிம்ம வாகனத்தின் மீறிச் சென்று வதம் செய்தார்.
அசுரர்களின் தோல்வியைக் கண்டு பயந்த இரத்த பீஜன் என்பவன் தவமிருந்து புதிய வரம் பெற்றான். இவனது உடலில் இருந்து சிந்தும் ஒரு துளி இரத்தத்திலிருந்து நூற்றுக்கணக்கான இரத்த பீஜன்கள் தோன்றுவார்கள். இவனை அழிக்க காளி தேவி, துர்க்கை மற்றும் தேவியின் சக்திகள் இணைந்து அவனது இரத்தம் பூமியில் விழாதவாறு தாங்கிப் பிடித்து அவனது கதையை முடித்தனர். இதனால் தேவிக்கு சாமுண்டேஸ்வரி என்ற பெயரும் கிடைத்தது.
அசுரர்கள் அழிக்கப்பட்ட அந்த ஒன்பது நாட்களைப் போற்றும் விதமாகவே நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இக்காலகட்டத்தில் ஒன்பது நாட்களும் ஒன்பது சக்திகள் வணங்கப்படுகின்றன:
முதல் 3 நாட்கள் (இச்சா சக்தி - துர்க்கை).. அதாவது தீய சக்திகளை அழித்து மனதைத் தூய்மைப்படுத்தும் நாட்கள். அடுத்த 3 நாட்கள் (கிரியா சக்தி - மகாலட்சுமி).. அதாவது செல்வங்களையும், நற்குணங்களையும் அள்ளி வழங்கும் நாட்கள். கடைசி 3 நாட்கள் (ஞான சக்தி - சரஸ்வதி) அதாவது கல்வி, ஞானம் மற்றும் கலைகளை அருளும் நாட்கள்.
அசுரர்களுடன் நடந்த போரின் தீவிரத்தைக் குறைப்பதற்காகவும், தெய்வங்களை வழிபடுவதற்காகவும் நமது பாரம்பரியத்தில் பொம்மைகள் செய்து வைத்து மாலை நேரங்களில் பாடி, ஆடி மகிழும் வழக்கம் உருவானது.
ராமாயணத்தில் சீதையை மீட்க ராமன் புறப்பட்டதும், அசுரர்களை வென்றதும் இந்த விஜயதசமி நாளில்தான் என்று வேதங்கள் கூறுகின்றன. இந்நன்னாளில் கல்வி, கலைகள் மற்றும் ஆயுதபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
புராணம் அறிவோம்.. நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
தனிமை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
{{comments.comment}}