சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தர்ம யுத்தம் என்னும் போராட்டத்தை துவக்கினார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு பிறகு அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட உடன் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இவருக்கு ஆதரவாக ஒரு சில எம்எல்ஏ.,க்களும் அதிமுக.,வில் இருந்து விலகி வந்தனர். ஆனால் இவருடன் இருந்த எம்எல்ஏ.,க்கள் ஒவ்வொருவராக பிரிந்து வேறு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர்.
சமீபத்தில் மனோஜ் பாண்டியனும், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுக.,வில் போய் சேர்ந்து விட்டார். தற்போது ஓபிஎஸ் உடன் இருப்பது வைத்தியலிங்கமும், இன்னும் சில ஆதரவாளர்களும் மட்டும் தான். இந்நிலையில் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார் ஓபிஎஸ். அந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர், அதிமுக.,வை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியதுடன், அந்த இணைப்பு டிசம்பர் 15ம் தேதிக்குள் நடக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கு கெடுவும் விதித்தனர். டிசம்பர் 15ம் தேதிக்குள் இணைப்பு நடக்கவில்லை என்றால் அதற்கு பிறகு தனிக்கட்சி துவக்க உள்ளதாகவும், டிசம்பர் 15ம் தேதிக்கு முன் திருந்த வேண்டும் இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்றும் சவாலும் விட்டனர்.
.jpg)
அதிமுக.,வில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனை நாட்களாக அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற குழுவை நடத்தி வந்த ஓபிஎஸ், இப்போது தனிக்கட்சி துவங்கும் முடிவை ஏன் எடுத்தார்? அவரது திட்டம் தான் என்ன? என அரசியல் வட்டாரத்தில் விவாதங்களும், கேள்விகளும் எழுந்துள்ளது. அதுவும் டிசம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள இந்த சமயத்தில் எதற்காக இந்த காலக்கெடு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சு, பாஜக.,வுக்கு மறைமுகமாக சொல்லும் மெசேஜ் என்று சொல்லப்படுகிறது. பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுக.,தான் மீண்டும் வெற்றி பெறும் சொல்லிக் கொண்டிருந்த ஓபிஎஸ், பீகார் தேர்தல் முடிவுகள் வெளியானதும் முதல் ஆளாக பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டார். இப்போது யாரிடம் பலம் உள்ளது என புரிந்து கொண்டு விட்டதால், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னையும் இணைத்து, தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும் என்பது தான் அந்த மெசேஜ்.
திமுக, தவெக பக்கம் செல்ல முடியாது. தனிக்கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. தனித்து போட்டியிட்டால் சுயேட்சையாக தான் போட்டியிட முடியும். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கிறார் ஓபிஎஸ்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால், ஒரு ஓட்டைக் கூட தவற விட்டு விடக் கூடாது என்பதில் அதிமுக-பாஜக தலைமைகள் திடமாக உள்ளன. இதனால் எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுக.,விற்கு மீண்டும் வர தயாராக இருப்பவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக முடிவு செய்யத் தான் அதிமுக பொதுக் குழுவை கூட்ட உள்ளதாம். எங்களையும் மீண்டும் அதிமுக.,வில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதை முன்கூட்டியே மறைமுக சொல்லத் தான் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் அப்படி பேசி உள்ளார்களாம். ஆனால் யாரை வேண்டுமானாலும் அதிமுக.,வில் சேர்த்துக் கொள்வேன். ஆனால் கட்சியின் சின்னத்தை முடக்கி, கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஓபிஎஸ்.,ஐ மட்டும் கட்சியில் மீண்டும் சேர்க்கவே மாட்டேன். அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இடம்பெறுவதற்கு தான் எதிர்ப்பு சொல்ல மாட்டேன் என பாஜக தலைமையிடம் தெளிவாக கூறி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
என்டிஏ கூட்டணியில் இடம்பெறுவதற்கு டிடிவி.தினகரனிடம் அமமுக என்ற கட்சி உள்ளது. ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் கூட்டணி பேசி, 2 சீட்டுக்களையாவது பெற்று விடுவார். தன்னிடம் எதுவும் இல்லை என்பதால், ஒன்று தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். இல்லை என்றால் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும். இது தான் ஓபிஎஸ் முன்னால் இருக்கும் வாய்ப்புகள். அரசியலில் எதுவும் நடக்கும் என்பதால், அதிமுக.,வில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டு, தனக்கு தேர்தலில் சீட் தர வேண்டும். இல்லை என்றால் தனிக்கட்சி ஆரம்பித்து, அதை வைத்து பாஜக., உடன் கூட்டணி பேசி 2 தொகுதிகளை பெற்று, தேர்தலில் போட்டியிட வேண்டும். இது தான் ஓபிஎஸ்.,ன் திட்டம். இதை மனதில் வைத்து தான் இவ்வளவு காலமாக இல்லாமல் இப்போது தனிக்கட்சி துவங்கும் முடிவை எடுத்துள்ளாராம்.
ஓபிஎஸ்ஸின் புதிய கட்சி முடிவுக்கு இது தான் காரணமா.. யு டர்ன் போடுவது ஏன்?
திமுகவா.. தவெகவா?.. பரபரக்கும் களம்.. செங்கோட்டையனை சேகர்பாபு சந்தித்தது ஏன்? 4 வாய்ப்புகள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்வு... சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம் இன்று!
வங்கக் கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!
{{comments.comment}}