டெல்லி: பழைய ராகுல் காந்தி இப்போது இல்லை. அந்த ராகுல் காந்தியை நான் கொன்று விட்டேன். எனக்கு இமேஜ் முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. இனி அந்த ராகுல் காந்தி திரும்ப வர மாட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் ராகுல் காந்தி. தற்போது அவர் ஹரியானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின்போது செய்தியாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது வைரலாகியுள்ளது.

"பழைய ராகுல் காந்தி உங்களது மனதில்தான் உள்ளார். அவரை நான் கொன்று விட்டேன். இப்போது அவர் இல்லை. எனது மனதில் இல்லை. அவர் போய் விட்டார்.. இனி வர மாட்டார்" என்று கூறினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது ராகுல் காந்தி அல்ல.. அவரை நீங்கள் பார்க்கலாம்.. ஆனால் புரிந்து கொள்ள முடியாது. இந்து புராணங்களைப் படியுங்கள். சிவனைப் படியுங்கள்.. உங்களுக்குப் புரியும். அதிர்ச்சி அடையாதீர்கள்.. ராகுல் காந்தி உங்களது தலைக்குள்தான் இருக்கிறார். என்னிடம் இல்லை. அவர் பாஜகவின் தலைக்குள் இருக்கிறார்.. என்னிடம் இல்லை" என்று கூறினார் ராகுல் காந்தி.
அத்தோடு விடவில்லை ராகுல்காந்தி.. " என் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு இமேஜ் பற்றிக் கவலை இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. நல்லவனாகவும் பார்க்கலாம், கெட்டவனாகவும் பார்க்கலாம்" என்றார் ராகுல் காந்தி.
மிகவும் தத்துவார்த்தமாக ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது இமேஜை வலிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}