சென்னை: என் கணவரின் கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் என நடிகை ஜோதிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக, உருவாகியுள்ள இப்படம் வெளியாகும் முன்னரே படத்தின் காட்சிகள் குறித்து அவ்வப்போது படக் குழுவினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தனர். இதனால் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.

இந்த நிலையில், கங்குவா படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்படம் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக சவுண்ட் எபெக்ட் அதிகமாக இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதேபோல் இப்படத்தின் காட்சிகளை வைத்து ட்ரோல்களாக சோசியல் மீடியாவில் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டது.
இதற்கிடையே நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். படத்திற்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்புகின்றனர் என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கங்குவா படத்தின் விமர்சனம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
வெற்றி பெற்ற சில மோசமான கமர்சியல் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் என் கணவரின் கங்குவா படத்திற்கு கடுமையான விமர்சனங்களே வந்தன. படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் தென்னிந்தியாவில் வந்த எத்தனையோ மோசமான படங்களுக்கு கொடுத்ததை விட கடுமையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மற்ற படங்களைவிட கங்குவா பெற்ற விமர்சனங்கள் என்னை பாதித்தது. மேலும், இந்த விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது நியாயம் இல்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}