விசுவாசு வருடம் 2026 புதன்கிழமை பங்குனி 18 ஆம் நாள் ஏப்ரல் மாதம் பிறந்துள்ளது. இது கோடைக்காலத்தின் ஆரம்பம். கிரகோரியன் நாட்காட்டியின் நான்காவது மாதம் ஏப்ரல் மாதமாகும்.
ஏப்ரல் மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது April -1 .. ஏப்ரல் ஃபூல் (April fool) -,முட்டாள்கள் தினம் என்பதே ஆகும். இவ்வாறு எதிர்மறையாக நினைப்பதை தவிர்த்து, இம்மாதம் நடைபெறும் விசேஷ நாட்களையும், திருவிழாக்களையும், பண்டிகைகளையும், விடுமுறை நாட்களையும் எண்ணி மகிழ்வோம்.
ஏப்ரல் மாதம் பெயர் காரணம்:
ஆங்கில வருடத்தில் நான்காவது மாதமாக வரும் ஏப்ரல் மாதம் ரோமானிய நம்பிக்கைகளின் படி வீனஸ் தேவதைக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனஸை 'அஃப் ரோடைட்' என்று அழைத்தனர். அதன்படி வீனசு தேவதையின் மாதம் என பொருள் தரும் "அப்லோரிசு" என்று அழைக்கப்பட்டது. இந்த சொல்லே காலப்போக்கில் மருவி ' ஏப்ரல்' என்று அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இவ்வருடம் ஏப்ரல் முதல் தேதியே பங்குனி உத்திரமும்,பௌர்ணமியும் சேர்ந்து வந்திருப்பது அனைத்து தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாக பிறந்துள்ளது. வட இந்தியாவில் ரபி பயிர்களை அறுவடை செய்யும் காலம். தமிழ் புத்தாண்டு பிறக்கும் மாதம் என்பதால் தமிழர்களுக்கும் மிகவும் முக்கியமான மாதம் ஆகும். தொழில் ஸ்தாபனங்களில் புது கணக்கு போடும் நாளாகவும்,புதிய நிதியாண்டின் துவக்கமாகவும் அமைந்துள்ள இந்த புதன்கிழமை ஏப்ரல் முதல் தேதி மிகவும் விசேஷமான நாளாகும்.
இம்மாதத்தில் வரும் விசேஷமான நாட்களும் பண்டிகைகளும் பற்றி இப்பதிவில் காண்போம்.
ஏப்ரல் மாத விசேஷமான நாட்கள் :
ஏப்ரல் 1: பௌர்ணமி திதி, பங்குனி உத்திரம் புது கணக்கு போட உகந்த நாள்.
ஏப்ரல் 2 :காலை7:57 வரை பௌர்ணமி திதி உள்ளது.
ஏப்ரல் 3 :புனித வெள்ளி.
ஏப்ரல் 5 :சங்கடஹர சதுர்த்தி.
ஏப்ரல் 6: சுபமுகூர்த்தம்.
ஏப்ரல் 7 :உலக சுகாதார தினம்.
ஏப்ரல் 8: தேய்பிறை சஷ்டி விரதம்.
ஏப்ரல் 9 :தேய்பிறை அஷ்டமி.
ஏப்ரல் 10 : நவமி.
ஏப்ரல் 12 :சுப முகூர்த்தம்.
ஏப்ரல் 13 :ஏகாதசி விரதம் சுப முகூர்த்தம் .
ஏப்ரல் 14 :தமிழ் வருட பிறப்பு. சித்திரை 1.
ஏப்ரல் 15 :பிரதோஷம்.
எப்படி 16: இரவு 7:32 முதல் அமாவாசை.
ஏப்ரல் 17 :அமாவாசை. (மாலை 5:47 வரை ).
ஏப்ரல் 18: சந்திர தரிசனம்.
ஏப்ரல் 19 :கிருத்திகை.
ஏப்ரல் 20: அட்சய திருதியை.
ஏப்ரல் 22 : பூமி தினம். சஷ்டி விரதம்.
ஏப்ரல் 27: ஏகாதசி விரதம்.
ஏப்ரல் 29 :பிரதோஷம்.
ஏப்ரல் 30 :சுபமுகூர்த்தம்.
ஏப்ரல் மாதம் அனைவருக்கும் அனைத்து வளங்களும் நலங்களும் அருளும் மாதமாக அமையட்டும். மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}