ஏப்ரல் 1 வந்தாச்சு.. புதுக் கணக்கு ஆரம்பிப்போம்.. புத்தெழுச்சியுடன் தொடங்குவோம்!

Mar 31, 2026,03:21 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

விசுவாசு வருடம் 20 26 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி புதன்கிழமை புது கணக்கு தொடங்குவது இந்தியாவின் புதிய நிதி ஆண்டு தொடக்கம் அதாவது, Financial year 2026 ஏப்ரல் 1 முதல் 20 27 மார்ச் 31 வரை  என்பதை குறிக்கின்றது.

தமிழகத்தில் வணிகர்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில்  இந்த நாள் சிறப்பான பூஜைகள் மற்றும் புது கணக்கு துவங்கும் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம்.

வருடம் முழுவதும் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பழைய நிதி ஆண்டின் கணக்குகளை முடித்துவிட்டு (closing) புதிய ஆண்டிற்கான வரவு செலவுகளை பதியவும், வியாபாரம் லட்சுமி கடாட்சத்துடனும் சிறந்த லாபங்களுடனும் வியாபாரம் செழிக்க இந்த நாளில் புதிய கணக்கு புத்தகங்கள் அல்லது கணினி கோப்புகளில் முதல் பதிவை செய்வது வழக்கம்.

தொழிலில் லாப - நஷ்ட கணக்குகள்,வரவு செலவு பதிவேடுகள் மற்றும் வரிகள் (Income tax) கணக்கிடப்படுவதனால் வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் புதிய கணக்கு புத்தகத்தை தொடங்கி கணபதி ஹோமம், லட்சுமி குபேரர் பூஜை செய்கின்றனர்.இதனால் வியாபாரம் செழிப்புடன் நடைபெற்று, வருமானம் பெருகும் என்பது ஐதீகம். 



நேரம்:
 
ஏப்ரல் 1 புதன்கிழமை உத்திரம் நட்சத்திரம், காலை 9 :00மணி முதல் 10:00 மணி வரை. பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை.
 
பௌர்ணமி திதி :

பங்குனி 18 ஆம் நாள் 01.04.2026 புதன்கிழமை காலை 7:38 மணி முதல் பங்குனி 19 ஆம் நாள் வியாழக்கிழமை 02.04.2026 காலை 7:57 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. 
 
புது கணக்கு  தொடங்க நல்ல நேரம் ஏப்ரல் 1 புதன்கிழமை காலை 7:00  முதல்7:30 மணி வரை பின்னர் ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை காலை 9 :00மணி முதல் 10 :00மணி வரை நல்ல நேரம்.  (அவரவர் வசதிக்கு ஏற்றார் போல் புது கணக்கு போடுவது சிறப்பு) 

ஏப்ரல் 1 புதன்கிழமை அன்று பவுர்ணமி திதியும், பங்குனி உத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம் ஆகும். இந்த நாளை தவற விடாதீர்கள்.

முக்கிய காரணங்கள் :

இந்த நாள் புது கணக்கு எழுதினால் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்து, வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெற்று, கோடி கோடியாக லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வணிக ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் இந்த நாள் புது கணக்கு தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.

வழிபாடு முறைகள் :

நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி வியாபார நிறுவனங்களிலும், வீடுகளிலும் விநாயகர் பூஜை செய்து,புது கணக்கு துவங்கும் நோட்டை பூஜை அறையில் வைத்து பூஜை செய்வது சிறப்பு. ஆண்கள்   எண்ணெய் தேய்த்து குளிப்பதும், பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதும் சிறப்பு.பின்னர் மங்களகரமான மஞ்சள் நிற ஆடைகளை அணிவது அதிக சிறப்பு. அவரவர் குடும்ப வழக்கப்படி செய்வது நன்று.

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று,வியாபார நிறுவனத்தில் பூஜை செய்யும் இடத்தில், அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து, புதிதாக புது கணக்கு துவங்க இருக்கும் நோட்டில் மஞ்சள் குங்குமம் இட்டு, "சுபம் லாபம்" என்று மஞ்சளில் எழுதுவது  சுபிக்ஷம்.

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரங்கள்: 'ஓம் ஸ்ரீ லலிதம் லம்போதனம் "எனும் மந்திரத்தை 27 முறை கூறுதல் சிறப்பு. இந்த மந்திரம் உச்சரிக்க எதிர்பாராத பணம் வந்து சேரும்.பெண்கள் லட்சுமி அஷ்டோத்திரம்,கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது நன்மை பயக்கும்." ஸ்ரீ லாபம் அக்ஷயா" அல்லது "ஸ்ரீ அக்ஷயா லாபம்" என்று மஞ்சளில்  எழுதி புது கணக்கு தொடங்குவது சிறப்பு. சிலர் மாலையிலும் பூஜைகள் செய்து புது கணக்கு துவங்குவர்.

மஞ்சள் நிற இனிப்பு வகைகளை படைத்து பூஜை செய்வது சிறப்பு. தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் பணிபுரிபவர்களுக்கு பூஜையில் வைத்த இனிப்புகள் வழங்குவது நன்மை பயக்கும்.

வாழ்க்கையில் இவ்வாறு முழு மனதோடும்,முழு நம்பிக்கையுடனும் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்பலன்கள் கிடைப்பது உறுதி. தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இந்த நிதி ஆண்டு நற்பலன்கள் இறைவன் அருள்வார்.
 மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?

news

CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?

news

Karnataka Power Trasnsition: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்

news

டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!

news

கருப்பு நிற தண்ணீர்.. திரில்லான தால் ஏரி படகுப் பயணம்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 10)

news

Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!

news

உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!

news

சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!

news

The Sacrifices of a Mother.. ஒரு தாயின் தியாகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்