முக்கனிகளில் ஒன்று தான் பலாப்பழம். அந்தப் பலாப் பழத்தைக் கொண்டாடும் தினம் இன்று. அதாவது உலக பலாப்பழ தினம் இன்று. சரி ஏன் இதைக் கொண்டாடுகிறோம் தெரியுமா.
பலாப் பழம் மிக மிக சுவையானது மட்டுமல்ல, பல நன்மைகளும் நிறைந்துள்ளது. ஆண்டு தோறும் ஜூலை 4ம் தேதி பலாப்பழ தினம் கொண்டாடப்படுகிறது. இது 2016ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பலாப்பழத்தின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைக்கவே ஆண்டுதோறும் பலாப்பழ தினம் கொண்டாடப்படுகிறது.
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் சஞ்சீவினி என்றும் அழைக்கப்படுகிறது.
பலாப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. இது எடையை குறைக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். பலாப்பழத்தை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதோடு, பருவ கால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது.பலாப்பழம் சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.
இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனை உட்கொள்வதால் குடல்களும் சுத்தமாகிறது. பலாப்பழம் சாப்பிடுனதால் உடலில் இரும்பு சத்து, மட்டுமின்றி இரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் எலும்புகளும் வலுவடையும் தசைகளில் ஏற்படும் வலியும் எளிதில் போய்விடும். பலாப்பழத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் எலும்பு நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது.
மேலும், பலாப்பழம் குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது.பலப்பழம் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்கிறது.
பலாப்பழம் ஒரு சுவையான இறைச்சிக்கு மாற்றான உணவாகும். பலாக்காய் கூட்டு, பலாப்பழம் குழம்பு, பலாக்காய் பொறியல், பலா கொட்டை கூட்டு, பலா கொட்டை குழம்பு, பலா விதை குருமா, பலாக்காய் பிரியாணி போன்றவையும் இதில் செய்யலாம். தமிழ் முக்கனிகளில் பலாவும் ஒன்று. இப்போது மாம்பழ சீசன் போல, பலா சீசனும் கூட. கிடைச்சா விட்ராதீங்க மக்களே.. வாங்கிச் சாப்பிட்டு அனுபவிங்க.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}