- ஸ்வர்ணலட்சுமி
இன்றைய காலங்களில் நம் வீடுகள்,அலுவலகம், தொழிற்சாலை,கடை, மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் பரவலாக உருளியில் தண்ணீர் ஊற்றி, பூ வைத்து அலங்கரிப்பது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். பல வீடுகளில் பெரிய நிறுவனங்களில் வரவேற்பரையில் பெரிய உருளியில் அதாவது அக்ஷய பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்து நம் கவனத்தை ஈர்க்கும் உருளிபாத்திரத்தை வைப்பதால் லட்சுமி கடாக்ஷம் நிரம்பியதாக கருதப்படுகிறது.
உருளி பாத்திரத்தை எங்கு?வைக்கலாம்..எப்படி? வைக்கலாம் என்பதை பார்ப்போமா...

அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் ஊற்றிய உருளி பாத்திரத்தை வீட்டின் வடகிழக்கு மூலையிலோ, வீட்டின் முன் வாசலிலோ அல்லது வரவேற்பரையிலோ வைக்க நேர்மறை ஆற்றல் (positive vibe) பெருகும்.
உருளியில் ஊற்றும் தண்ணீரில் சிறிது பன்னீர் ஊற்றி, ஏலக்காய் விதைகளை போட்டு,ஒரு கைப்பிடி துளசி இலைகள், பன்னீர் ரோஜா, மல்லிகை, பாரிஜாதம்,சம்பங்கி பூ, சாமந்தி என வாசனை மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்க வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். நம் மனதிலும் எதிர்மறை எண்ணங்கள் தவிர்த்து நேர்மறை ஆற்றல் பெருகும்.
பராமரிப்பது எப்படி?
உருளியில் ஊற்றிய தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். அன்றாடம் இவ்வாறு செய்ய நேரம் இல்லாதவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையேனும் தண்ணீர் மாற்றி அழகான வாசனை மலர்கள் மாற்றுவது சிறப்பு. உருளியில் இருக்கும் மலர்கள் வாடிப்போகும் வரை அப்படியே விடுவதை தவிர்ப்பது நல்லது. இயன்றவரை ஃபிரஷ் ஆன மலர்கள் வைக்க நம் மனதிலும் பிரஷ் ஆன நல்ல எண்ணங்கள் ஒளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
எந்த உலோகத்தினால் ஆன உருளியை வைக்கலாம்?..
பெரும்பாலும் ஐம்பொன், பித்தளை, செம்பு,மண்ணால் செய்யப்பட்ட உருளியை வைப்பது சிறப்பு. இன்றைய நாட்களில் அழகழகான கண்ணாடி, பீங்கான் இவைகளில் பல்வேறு டிசைன்களில் உருளிகள் கடைகளில் விற்கப்படுகின்றன. உருளியில் ஊற்றும் தண்ணீரில் ஜவ்வாது சிறிது சேர்ப்பதனால் வீடு நறுமணமாக கோவில் போல மணக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகினாலே வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் பெருகும்.
தாமரை மலர்கள் கொண்டு உருளி அலங்கரிப்பதால் லட்சுமி சம்பத்து பெருகும். பூக்களின் இதழ்களை உதிர்த்துப் போடாமல் முழு பூக்களை கொண்டு உருளியை அலங்கரிப்பது சிறப்பு. கட்டாயமாக இரும்பு, எவர்சில்வர், அலுமினியம் இதனால் ஆன உருளியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உருளி என்பது தென்னிந்தியாவின் பாரம்பரிய வட்ட வடிவ கிண்ணம்.இது தமிழ் வார்த்தையான 'உருளை'யிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. வீடுகளில் பெரிய அப்பார்ட்மெண்ட்களில், செல்வம்,அமைதி, அழகு, நேர்மறை ஆற்றல் பெருக வீட்டின் முன் வாசலில் அலங்கரிக்கப்பட்ட உருளியை பார்க்க மிகவும் அழகாகவும் கண்களுக்கு குளிர்ச்சி யாகவும் இருக்கும். கண் திருஷ்டி அகலும் என்று கூறப்படுகிறது.யாரேனும் உறவினர்கள் வரும்பொழுது அழகிய மலர்களை பார்க்க அவர்களுக்கும் நேர்மறை ஆற்றல் உருவாகும்.
வாஸ்து சாஸ்திரப்படி தண்ணீருடன் இணைந்த உருளி நிதி செழிப்பை ஈர்க்கும் என்று கூறுவார்கள். வரவேற்பறை அல்லது பூஜைஅறையில் வைப்பது அமைதியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.
உருளி ஒரு கலைப் பொருளாகவும்,வீட்டு அலங்கார பொருளாகவும், வீட்டின் அழகை அதிகரிக்கவும் வைக்கப்படுகிறது. உருளியை மலர்கள் கொண்டு அழகுபடுத்தினாலே மன அழுத்தம் குறையும். குழந்தைகளுக்கும் இது போன்ற நல்ல விஷயங்களை சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுப்பது சிறப்பு. அவர்களும் உருளி அலங்காரத்தை விளையாட்டாகவும், மகிழ்ச்சியாகவும், அழகாகவும் அலங்கரிப்பார்கள்.
எந்த ஒரு நல்ல செயலும், சிந்தனையும், அழகும் அலங்காரமும்,நம் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கே. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
{{comments.comment}}