புனே: தனது பிறந்த நாளுக்கு காஸ்ட்லி கிப்ட்டும் தரலை, டெல்லிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா அதுக்கும் பெர்மிஷன் தரலை.. துபாய்க்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லியும் கூட்டிட்டுப் போகலை என்பதால் கோபமடைந்த மனைவி, தனது கணவர் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் பரிதாபமாக இறந்து போனார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வனாவ்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ரேணுகா. 38 வயதாகும் ரேணுகாவும் நிகில் கண்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் ரேணுகாவுக்கு பிறந்தநாள் வந்தது. இதை துபாயில் கொண்டாட அவர் விரும்பினார். ஆனால் அங்கு சென்று கொண்டாட விரும்பவில்லை நிகில் கண்ணா. இதனால் துபாய்க்கு கூட்டிச்செல்ல மறுத்தார். சரி பரவாயில்லை, டெல்லியில் போய் உறவினர்களுடன் கொண்டாடிக் கொள்கிறேன். அதற்காவது அனுமதியுங்கள் என்று கேட்டுள்ளார் ரேணுகா. அதற்கும் நிகில் கண்ணா அனுமதி தரலையாம். இதனால் கடு் ஏமாற்றமடைந்தார் ரேணுகா. தான் கேட்ட காஸ்ட்லியான கிப்ட்டுகளையும் கூட நிகில் கண்ணா தரவில்லையாம்.
இதனால் கோபமடைந்தார் ரேணுகா. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது தன்னுடைய பேச்சைக் கேட்க மறுத்த கணவர் மீது கோபம் அடைந்த ரேணுகா, நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு பற்களும் உடைந்து முகமெல்லாம் ரத்தக் களறியாகி விட்டது. சில நொடிகளில் சுய நினைவிழந்து மயங்கி விழுந்தார் நிகில் கண்ணா. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரேணுகா.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகில் கண்ணா, அங்கு மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரேணுகா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புருஷனை மூஞ்சியில் குத்தலாம்.. மூக்கை உடைக்கலாம்.. ஏன் அடிக்கலாம், மிதிக்கலாம்.. மனைவிகளுக்கு முழு உரிமை இருக்கு.. அதுக்காக இப்படியா உயிர் போற அளவுக்கு அடிப்பாங்க..!
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}